90களில் தமிழ்சினிமா உலகில் தாய்க்குலங்களால் போற்றப்பட்ட நடிகை சங்கீதா. இவர் சினிமாவிற்குள் எப்படி நுழைந்தார் என்பது ஒரு சுவாரசியமான விஷயம். வெறும் கவர்ச்சியை மட்டும் ரசிகர்களை மயக்கி விடலாம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சங்கீதா.
நடிகை சங்கீதா எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். கள்ளங்கபடம் ஏதும் இல்லாத இவரது அழகான சிரிப்பையும், பால் வடியும் முகத்தைப் பார்க்கும்போதும் நம்மை வெகுவாகக் கவர்ந்து விடுவார். அதிகமான படங்களில் நடிக்காதபோதும் இவரைத் தமிழ்சினிமா ரசிகர்கள் இன்றுவரை மறக்கமுடியாது.
இவர் நடித்த படங்களில் துளியும் கவர்ச்சி இருக்காது. எல்லாமே குடும்பப்பாங்கான வேடம் தான். நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கிடைத்த படத்தில் பிரமாதமாக நடித்து ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டார்.
முதன்முதலாக தன் அம்மாவோடு குழந்தையாக இருந்தபோது சூட்டிங் பார்க்கச் சென்றாராம். அப்போது தனக்கு படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று அவரே சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா…
ராஜ்கிரணுக்கு ஜோடியாக எல்லாமே என் ராசா தான் படத்தில் சங்கீதா நடித்தார். அப்போது அவர் 8ம் வகுப்பு தான் நடித்தாராம்.
இவர் குழந்தையாக இருந்த போது இவரது அண்ணனுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க மூலமாக சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது இவர் கடைக்குட்டிக்காரர். நானும் வருவேன் என முரண்டு பிடிக்கவே அவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்படி ஒருமுறை ஆடிஷனுக்கும் சங்கீதாவையும் அழைத்துச் சென்றாராம். அங்கே பாக்கியராஜ் தான் ஆடிஷனில் வந்தவர்களை செலக்ட் செய்து கொண்டு இருந்தாராம். அண்ணனை செலக்ட் செய்த அவர், சங்கீதாவும் ஆடிஷனுக்குத் தான் வந்து இருக்கிறார் என்று அவரையும் செலக்ட் செய்து விட்டாராம்.
அப்படித் தான் மிஸ்டர் இந்தியா படத்தில் இருவருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதன்பிறகு சங்கீதாவுக்குத் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. லலிதா என்ற சீரியலில் கண்களில் ப்ளூ லென்ஸ் போட்டு நடித்துள்ளார் சங்கீதா.

பூவே உனக்காக படத்தில் நடித்த போது கேமராமேன் சரவணனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டா ராம். இவர் அவரது எந்த விஷயத்திலும் தலையிடுவதே இல்லையாம். அதனால் அவரும் அவரது வேலைகளைத் திறம்பட செய்து வருகிறாராம். அதனால் தான் அவர்களது இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்கிறார் நடிகை சங்கீதா.
சங்கீதா 1998ல் சியாமளா என்ற மலையாளப் படத்தில் நடித்ததில் தேசிய விருதும் பெற்றுள்ளார். மீண்டும் மலையாள திரையுலகம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


