தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்களை எடுத்துக் கொண்டால் ரத்தக் கண்ணீர் படத்தை அந்த லிஸ்ட்-ல் சேர்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க தனது நடிப்பின் அத்தனை அம்சங்களையும் கொட்டி நடித்திருந்தார் நடிக வேள் எம்.ஆர்.ராதா.
நாகடத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பதாலேயே எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனே எம்.ஆர்.ராதாவினை தனது திரையுலக ஆசானாக போற்றியிருக்கிறார்.
என்னங்கப்பா உங்க LCU.. அப்பவே CODE WORD சொல்லி BCU-ஆக கலக்கிய பாரதிராஜா…
ஒருமுறை பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் நாடகங்களை எழுதி அதை அரங்கேற்றம் செய்து வந்திருக்கிறார். சிவாஜிக்காக பல படங்களையும், எம்.ஜி.ஆருக்காக சில படங்களையும் பின்னாளில் இயக்கி புகழ்பெற்ற கே.எஸ். கோபால கிருஷ்ணன் தனது எழுத்தாளன் என்ற நாடகத்தினை அவருடைய சக்தி சக்தி நாடகசபாவில் நடத்த என்.ஏ.நடராஜன் என்பவர் சந்தித்துள்ளார்.
அவர் அனுமதி கேட்டவுடன் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நாடகம் நடைபெறும் அரங்கத்திலும் தனது பங்களிப்பை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நாடகம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஒருநாள் யாரும் எதிர்பாராத வகையில், நடிக வேள் எம்.ஆர்.ராதா இந்த நாடகத்தை காண வந்துள்ளார். இவர் வந்திருப்பதை அறிந்து கொண்ட என்.ஏ.நடராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் நாடகம் முடிந்தவுடன் அவரை அழைத்து மேடையில் நாடகத்தை பற்றி பேச சொல்வோமா? நாம் கேட்டுக்கொண்டால் அவர் பேசுவாரா என்று இருவருமே யோசித்துக் கொண்டிருந்த வேளையில் எம்.ஆர்.ராதவே, நாடகம் முடிந்தவுடன் பேசுவதற்காக அனுமதி கேட்டு ஒருவரை அனுப்பியுள்ளார்.
தாங்கள் எதிர்பார்த்தது போலவே எம்.ஆர்.ராதாவே பேச உள்ளார் என்பதை அறிந்த இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நாடகம் முடிந்தபின் பேசுவதற்ககா மேடை ஏறிய எம்.ஆர்.ராதா ஒரு கையில் பீடி ஒரு கையில் தீப்பெட்டியுடன் தனது ஸ்டைலில் பேச தொடங்கியுள்ளார்.
இதை பார்த்த அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவற்றைக் கண்டு கொள்ளாது பேச தொடங்கிய எம்.ஆர்.ராதா, இந்த நாடகத்தை தொடங்கும்போது பீடி பிடிக்கலாம் என்று எடுத்தேன். ஆனால் நாடகம் விறுவிறுப்பாக சென்றதால், கடைசிவரை இந்த பீடியை என்னால் பிடிக்க முடியவில்லை. இதைவிட இந்த நாடகத்தை பற்றி நான் என்ன சொல்லிவிட முடியும் என்று பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
மேலும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனையும் பார்க்க ஆசைப்பட்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்ட போது கலைவணார் உங்களது எழுத்தாளன் நாடகத்தை எம்.ஆர்.ராதா சிறப்பாக இருந்து என்று கூறி அவரை வாழ்த்தினார்.