என்னங்கப்பா உங்க LCU.. அப்பவே CODE WORD சொல்லி BCU-ஆக கலக்கிய பாரதிராஜா…

இன்று நாம் LCU என இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்களைத் தூக்கிக் கொண்டாடுகிறோம். கைதியில் ஆரம்பித்த அவரின் LOKESH CINEMATIC UNIVERSE பயணம், மாஸ்டர், விக்ரம், லியோ என அவரின் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது. தனது முந்தைய படங்களின் ஒரு சில காட்சிகளின் தொடர்ச்சியை தனது அடுத்த படங்களில் சில இடங்களில் பயன்படுத்தி முந்தைய கதையையும், அடுத்த படத்தின் கதையுடன் முடிச்சுப் போட்டு எழுதியிருப்பார் லோகேஷ் கனகராஜ்.

திரையுலகில் டிரண்ட் ஆகிய இந்த ஸ்டைலை ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர். மேலும் அவரின் அடுத்தடுத்த படங்களிலும் இதுபோன்று தொடருமான எனவும் அவரைப் பார்க்கும் இடங்களிலெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் கடைப்பிடிக்கும் இந்த சினிமா எழுத்து நடையினை 1980களிலேயே இயக்குநர் இமயம் பாரதிராஜா அசால்ட்டாக சொல்லியிருப்பார். அப்போது சினிமாவினை இன்று சினிமாவினை அங்குலம் அங்குலமாக விமர்சிப்பது போல் நடைமுறைகள் இல்லாத காரணத்தால் பல திரைப்படங்களில் கையாளப்பட்டிருக்கும் உக்திகள் வெளியே தெரியாமல் போய்விட்டது.

அந்த வகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது முதல் படமான 16 வயதினிலே படத்தினை எடுத்து முடித்து பெரும் வெற்றியைக் கொடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்க ஆரம்பித்த தருணம். அடுத்த படத்தையும் கண்டிப்பாக வெற்றியாக்க வேண்டும் என வெறிகொண்டு உழைத்து எடுத்த படம்தான் கிழக்கே போகும் ரயில். முதல்படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் ராதிகாவை அறிமுகப்படுத்தினார்.

குணாவின் மொத்த பாடலையும் 2 மணிநேரத்தில் முடித்த இசைஞானி.. ராஜாதி ராஜாதான் போல..

தனது முந்தைய படமான 16 வயதினிலே கிளைமேக்ஸ் காட்சியில்  கமல் ஜெயிலுக்குப் போகும் போது பாரதிராஜா தனது ஸ்டைலில் “என்றாவது ஒருநாள் சப்பாணி வருவான் என்ற நம்பிக்கையில் மயில் காத்துக் கொண்டிருக்கிறாள்“ என முடித்திருப்பார்.

இந்த கிளைமேக்ஸின் தொடர்ச்சியை தனது அடுத்த படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு இடத்தில் கூறியிருப்பார். அந்தப் படத்தில் மொய்  எழுதுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் ஒலிப்பெருக்கியில் ஒவ்வொருவரின் மொய்ப்பணத்தினை அறிவித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி, ஐந்து ரூபாய் என ஒரு வசனம் அதில்  இடம்பெறும். இங்குதான் நம் இயக்குநர் இமயம் தான் எப்படிப்பட்ட கிரியேட்டர் என்பதை நிரூபித்திருப்பார்.

அதாவது 16 வயதினிலே கிளைமேக்ஸ் காட்சியில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் மயில் மீண்டும் சப்பாணி வந்தவுடன் இருவரும் சந்தோஷமாக வாழ்வது போன்றும், அவர்கள் விஷேசத்திற்கு வந்து மொய் எழுதுவது போலவும் யோசித்து அந்தக் காட்சியை எடுத்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா.

இதன் மூலம் தனது முந்தைய படங்களின் தொடர்ச்சியை அடுத்த படத்திலும் இதுபோன்றதொரு CODEWORD கூறி அப்பவே இப்போதுள்ள LCU பாணியைக் கொடுத்திருக்கிறார் நம் பாரதிராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.