சாமியாட வைக்கும் தாயே கருமாரி ஆல்பம்.. LR ஈஸ்வரியின் கிளாசிக்கல் ஹிட் அம்மன் பாடல்கள்

By John A

Published:

நீங்கள் 1980 களில் பிறந்திருந்தால் இந்தப் பாடலை ஒலிபரப்பாமல் உங்கள் ஊர் கோவில் திருவிழாக்கள் முழுமையாகி இருக்காது. அம்மன் வேடங்களுக்கு கே.ஆர்.விஜயா என்றால் அம்மன் பாடல்களுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி தான் என்னும் அடையாளத்தினை உருவாக்கியவர். கிராமமாகட்டும், நகரமாகட்டும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணிக்கெல்லாம் கூம்பு ஒலிப்பெருக்கியில் நம்மை எல்லாம் எழுப்பி விடும் மந்திர கானங்கள் தான் தாயேகருமாரி எங்கள் தாயே கருமாரி பாடல்கள்.

இந்தப் பாடல்களைக் கேட்டாலே மனதிற்குள் ஒரு புத்துணர்வு பிறந்து ஏதோ ஓர் இனம் புரியாத சந்தோஷம் அன்றைய நாள் முழுவதும் நிரம்பியிருக்கும். பின்னனிப் பாடகியாக எல்.ஆர்.ஈஸ்வரி ஜொலித்த போது கூட அடையாத புகழை அம்மன் பாடல்களைப் பாடி அடைந்துள்ளார் என்றால் அது அம்மனே அவருக்குக் கொடுத்த அருள் ஞானம் எனலாம்.

கிறிஸ்தவராகப் பிறந்து மரியம்மாளை வணங்கி பின் மாரியம்மாவின் புகழ்பரப்பி அம்மன் அருளை தனது பக்திப் பாடல் மூலமாக பக்தர்களுக்கு பூரணமாக கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

பக்திப் பாடல்கள் என்றாலே மனதை அமைதியாக்கி உருக வைப்பதற்கு பதிலாக எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்தி பாடல்களோ அந்த மெஞ்ஞான நிலைக்கு மாறானவை. உடல் முழுவதும் VIBE ஏற்றி ஆட்டம் போட வைத்து விடும்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தாயேகருமாரி ஆல்பத்தின் பாடல்களில் ஒவ்வொரு பாட்டிற்கும் தனிதனி பாடலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அந்த வகையில் குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் சோமு- கஜா இசையில்,

மாரியம்மா எங்கள் மாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா… என்ற பாடலை எழுதியவர் கீதப் பிரியன்

தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி
துணை நீயே மகமாயி.. இந்தப்பாடலின் வரிகள் கலைவாணன் கண்ணதாசன்

கருணை உள்ளம் கொண்டவளே
கருமாரியம்மா – உன்
கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய்
அருள் மாரியம்மா..

இந்தப் பாடலுக்கான வரிகள் தேவாவின் ஆஸ்தான கவிரான காளிதாசன்

பூவே உனக்காக படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த விக்ரமன்.. இருந்தும் பாதியில் நின்ற ஷுட்டிங்.. எந்தப் படம் தெரியுமா?

அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி
அம்பிகையை கொண்டாடுவோம்…  இந்தப் பாடல் நாகை அம்பியின் வரிகளில் உருவானது.

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து
அரை வினாடி நில்லாத்தா….  கவிஞர் சிவமணி இயற்றியது.

கற்பூர நாயகியே கனகவல்லி
கற்பூர நாயகியே கனகவல்லி  …அவினாசி மணி வரிகளில் உருவான பாடல்

வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி
நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி… இசையமைப்பாளர் சோமுவின் வரிகள்.

காலமெனும் தேரிலேறி
கருமாரி நீ வருகையிலே…. காளி சித்தாதாசன் வரிகள்

கருணை வடிவானவளே
கரம் குவித்தோம் அம்மா
கவலையெல்லாம் தீர்த்து
ஆளும் கருமாரி அம்மா… வரிகளுக்குச் சொந்தக்காரர் எம்.பி.சிவன்.

இப்படி ஒவ்வொரு பாடலையும் என்றென்றும் நினைவில் வைக்கும் அளவிற்கு எழுதி, அதற்கு இசையால் உயிர் கொடுத்து, ரசிகர்களை முணுமுணுக்க வைத்தவர் எல்.ஆல். ஈஸ்வரி. ஆனால் இதில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பெயர் தவிர மற்ற அனைவரின் பெயர் இதுவரை எங்கும் பிரபலப்படுத்தப்படவில்லை என்பது தான் குறை.