எல்லா கதையையும் இங்கே சொல்லிட்டா!.. தியேட்டருக்குப் போய் என்ன பண்ணுவீங்க.. பிரசாந்த் தக் லைஃப் பதில்!

By Sarath

Published:

நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வரும் டாப் ஸ்டார் பிரசாந்த் இன்று செய்தியாளர்களை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சந்தித்தார். அப்போது விஜய்யின் அரசியல் குறித்தும் கோட் படம் குறித்தும் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அவற்றுக்கு எல்லாம் அழகாகவும் அசத்தலாகவும் பதில் அளித்தார் பிரசாந்த்.

விஜய் மற்றும் அஜித் முன்னணி நடிகர்களாக மாறுவதற்கு முன்பாகவே டாப் ஸ்டார் பட்டத்துடன் தமிழ் சினிமாவை மிரட்டியவர் பிரசாந்த். ஆனால் அதன் பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது மார்க்கெட் பெரும் சரிவை சந்தித்தது.

செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த்:

எப்படியாவது தனது மகனை மீண்டும் கோலிவுட்டில் முன்னணி நடிகராக கொண்டு வர வேண்டும் என அந்தகன் படத்தை தானே இயக்கத் தொடங்கினார் தியாகராஜன். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகாத நிலையில், கோட் படத்தில் தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிரசாந்த் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி சௌத்ரி, வைபவ் மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து பிரசாந்த் நடித்து வருகிறார்.

நெல்லையில் விஜய் நலத்திட்ட உதவிகளை செய்த நிலையில், பிரசாந்த் தூத்துக்குடியில் தனது ரசிகர் மன்றம் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை சந்தித்த செய்தியாளர்கல் விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நடித்து வருவது குறித்தும் ஏகப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. நண்பர் விஜய்யுடன் நடிக்கிறீங்களே எழுப்பப்பட்ட கேள்விக்கு சகோதரர்னே சொல்லலாம் என அதிரடியாக கூறினார் பிரசாந்த்.

எல்லாத்தையும் இப்பவே தெரிஞ்சிக்கணும்:

மேலும், விஜய்யுடன் நடித்து வரும் கோட் படம் குடும்ப படமா? என்கிற கேள்வியை ஒருவர் கேட்க, எல்லா கதையையும் இங்கே சொல்லிட்டா எப்படி பாஸ், படம் ரிலீஸ் ஆகட்டும் தியேட்டருக்கு சென்று அதைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க, அதற்கு முன்பாக அந்தப் படம் பற்றி கேட்டு என்ன பண்ணப் போறோம் என பேசி அசரடித்து விட்டார்.

நீங்க அரசியலுக்கு வருவீங்களா? என்கிற கேள்விக்கு ஜர்க்கான பிரசாந்த் விஜய்க்கு இருக்குற தில்லும் தைரியமும் அந்த விஷயத்துல எனக்கு இல்லை என வெளிப்படையாக சொல்லி விஜய்யின் அரசியல் வருகைக்கு என் வாழ்த்துக்கள் எனக் கூறினார்.