உலக சினிமாக்களை கரைத்துக் குடித்த நக்கல் மன்னன்.. கவுண்டமணியின் மறுபக்கத்தை உடைத்த நடிகை..

By John A

Published:

தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாகவும், கவுண்ட்டர் காமெடி கிங் ஆகவும் திகழ்ந்து மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பர் நடிகர் கவுண்டமணி. இவரை பாக்யராஜ் தனது குருவான பாரதிராஜாவிடம் பரிந்துரைத்து முதன் முதலாக 16 வயதினிலே படத்தில் அறிமுகப்படுத்த வைத்தார். அந்தப் படத்தில் பத்த வச்சுட்டியே பரட்ட என்ற வசனத்தின் மூலம் பிரபலமான கவுண்டமணி தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒருகட்டத்தில் இளையராஜா எப்படி படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தாரோ அதேபோல் கவுண்டமணி இருந்தாலே அந்தப் படம் வெற்றி என்ற நிலைக்கு உயர்ந்து முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். ஹீரோக்களையே தனது ஸ்டைலில் கலாய்த்து அவர்களை விட நடிப்பில் ஒருபடி மேலே போய் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

இவரும் செந்திலும் இணைந்து நடித்த முதல்படமே இவர்களுக்கு சூப்பர் ஹிட் காமெடி டிராக்கைக் கொடுத்தது. அந்தப் படம் வைதேகி காத்திருந்தாள். அதில் இடம்பெறம் பெட்டர்மாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்ற வசனம் இன்றளவும் புகழ் பெற்றதாக இருக்கிறது. கவுண்டமணியும் செந்திலும் இணைந்து கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.

இது கூடவா தெரியாமலா வந்தீங்க..? இயக்குநரை திட்டிய ‘மைக்‘ மோகன்

இந்நிலையில் வயோதிகத்தால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட கவுண்டமணி சமீபத்தில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துள்ளார். வருகிற ஏப்ரலில் இந்தப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் கவுண்டமணி பற்றி நடிகை சுகன்யா பேட்டி ஒன்றில் அவரின் திறமையைப் பற்றி தெரிவித்திருக்கிறார். அதில் கவுண்டமணியை நாம் அனைவருக்கும் ஒரு காமெடியனாக மட்டுமே தெரியும். ஆனால் அவருக்குள் இருக்கும் சினிமா அறிவு அதிகம். அதிகம் ஆங்கிலப் படங்களைப் பார்த்து உலக சினிமாவையே கரைத்துக் குடித்திருந்தார். ஹாலிவுட் நடிகர், நடிகைகளைப் பற்றி நிறைய பேசுவார்.

மேலும் அவருடன் நாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் தருணங்கள் எப்பொழுதுமே கலகலவென இருக்கும். நான் அவருடன் இணைந்து நடித்துள்ள படங்களில் என்னிடம் மிக அன்பாகப் பழகுவார். இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் கூட அவரின் காமெடிகளை இரசிக்கின்றனர் என்றால் அவரின் திறமைதான் காரணம் என்று சுகன்யா தெரிவித்துள்ளார்.

சுகன்யா கவுண்டமணி ஆகிய இருவரும் 90-களின் மத்தியில் வந்த பல படங்களில் நடித்து பெயர் வாங்கியிருப்பர். சின்னக்கவுண்டர், வண்டிச்சோலை சின்ராசு, இந்தியன் உள்ளிட்ட படங்கள் இதில் அடக்கம்.