இது கூடவா தெரியாமலா வந்தீங்க..? இயக்குநரை திட்டிய ‘மைக்‘ மோகன்

தமிழ் சினிமாவின் வெள்ளி விழா ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் தான் மைக் மோகன். தான் நடிக்க ஆரம்பித்த 15 ஆண்டுகளில் ஒரு புயலாக தமிழ் சினிமாவைப் புரட்டி எடுத்து தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தவர். நிறைய படங்களில் மைக் பிடித்து பாடல் பாடும் காட்சிகளில் நடித்ததால் மைக் மோகன் என்ற அடைமொழியுடன் வலம் வந்தார். 80-களில் இவர் பட பாடல்களை ரேடியோவிலும், கேஸட்டுகளிலும் ரசிகர்கள் திரும்பத் திரும்ப கேட்டு அவரை புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

இயக்குநர் பாலுமகேந்திராவின் கன்னடப் படமான கோகிலா படத்தின் மூலம் சினிமா உலக்கிற்கு அறிமுகமான மோகன் தமிழில் தேசிய விருது பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இயக்குநர் மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், மௌனராகம், மூடுபனி, விதி, பிள்ளை நிலா, கிளிஞ்சல்கள், தென்றலே என்னைத் தொடு போன்ற பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

கண்ணதாசன் சிபாரிசை ஒதுக்கிய எம்.எஸ்.வி., விடாப்பிடியாக நின்ற கவியரசர்.. சாதித்த ஜமுனா ராணி..

இளையராஜாவின் இசையும், மோகனின் அமைதியான நடிப்பும் இவரை ரசிகர்கள் மத்தியில் காதல் நாயகனாக மிளிரச் செய்தது. பெரும்பாலும் தன்னுடைய படங்களில் இவர் சொந்தக்குரலில் பேசி நடித்திருக்கமாட்டார். இவருக்கு டப்பிங் கொடுத்தவர் நடிகர் விஜய்யின் தாய்மாமாவான சுரேந்தர் தான். மேலும் சுரேந்தர் பல ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார். ஹீரோவான முதல் மூன்று வருடங்களிலேயே பல நூறு நாள் படங்களைக் கொடுத்தவர் மோகன் மட்டுமே.

இந்நிலையில் இயக்குநரும், பத்திரிக்கையாளருமான மணிபாரதி மோகனை பேட்டி எடுக்கும் போது தன்னுடைய அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அப்போது தான் அவர் பத்திரிக்கையாளராகச் சேர்ந்து முதன் முதலாகப் பேட்டி எடுத்த நபர் நடிகர் மோகன்தானாம். அந்நேரத்தில் மோகனின் படங்கள் சில வரிசையாக தோல்விப் படங்களாக அமைந்திருக்கின்றன.

அவரிடம் உங்கள் படங்கள் ஏன் தோல்விப் படங்களாக அமைகின்றன என்று கேட்ட போது ஏன் என்னுடைய வெற்றிப் படங்களை நீங்கள் பார்த்ததே இல்லையா? என்று கோபமாக பதில் அளித்தாராம். மேலும் நீங்கள் ஏன் சொந்தக் குரலில் பேசி நடிக்கவில்லை என்று கேட்கும் போது, நீங்கள் ஏதும் தெரியாமல் வந்து கேட்கிறீர்கள்.. நான் சொந்தக் குரலில் பேசி நடிக்க ஆரம்பித்து விட்டேன்.

உங்களுடைய பேட்டி போதும் இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று கோபத்துடன் எழுந்து சென்றாராம். இதனை மணிபாரதி பேட்டி ஒன்றில் குறிபிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...