கேப்டன் விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் இப்படி ஓர் உறவா? கேப்டனுக்கே நடிப்பு கற்றுக் கொடுத்த நிகழ்வு!

By John A

Published:

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கும், கிராமத்து நாயகன் ராமராஜனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே மதுரைக்காரர்கள். ஆனால் திரைத்துறையில் இவர்கள் நடிக்க வந்த காலகட்டங்களில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு எப்படி உருவானது தெரியுமா?

மதுரை மேலூரைச் சேர்ந்தவர் குமரேசன். அங்கிருந்த கணேஷ் திரையரங்கில் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தார். அந்த திரையரங்கத்தின் முதலாளி மீனாட்சி சுந்தரம்.  திரைப்பட இயக்குனர் காரைக்குடி நாராயணன் ‘அச்சாணி’ என்கிற படத்தை எடுத்தபோது அவருக்கு பண உதவி செய்தவர்.

அதில் ஏற்பட்ட நட்பில் ‘இவனுக்கு எதாவது வேலை கொடுங்க’ என சொல்லி குமரேசனை நாராயணிடம் அனுப்பி வைத்தார். நாராயணனின் அலுவலத்தில் ஆபிஸ் பாய் போல எல்லா வேலையும் செய்தார் குமரேசன். ஒருநாள் விஜயராஜ் என்பவர் மதுரையிலிருந்து ஒரு சிபாரிசு கடிதத்தோடு நடிக்க வாய்ப்புக் கேட்டு நாராயணனை பார்க்க அங்கு போனார். மதுரைக்காரர் ஒருவர் அங்கு வர குமரசனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

ரூ.90 சம்பளத்துக்காக ரயில்வே வேலையை உதறிய நாகேஷ்.. அரசு வேலைக்கு குட்பை சொல்லி சினிமாவுக்கு என்ட்ரி ஆன தருணம்!

ஓடிப்போய் இயக்குனரிடம் சொன்னார். ஆனாலும், விஜயராஜுக்கு நாராயணனால் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. காரணம் சொல்லி அனுப்பிவிட்டார். சில வருடங்களில் அதே நாராயணன் இயக்கத்தில் விஜயராஜ் ஹீரோவாக நடிக்க அதே படத்தில் குமரேசன் உதவி இயக்குனர். அந்த இயக்குனர் இராமநாரயணன்.

விஜயராஜ் அப்போது விஜயகாந்தாக இருந்தார். அந்த உதவி இயக்குனர் குமரேசன் பின்னாளில் தமிழ் சினிமாவை கலக்கிய ராமராஜன். அந்த திரைப்படம் தான் சிவந்த கண்கள். 1982-ல் வெளியான இந்தப் படத்தில் விஜயகாந்துக்கு வசனத்தை எப்படி பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்தவர் ராமராஜன். அதன்பின் ஹீரோவாக மாறினார் ராமராஜன்.

ஆனால் பின்னாளில் விஜயகாந்தின் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர் கருணாநிதி எனில் ராமராஜனின் திருமணத்தை நடத்தி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விஜயகாந்த் திமுகவில் இருந்தபோது ராமராஜன் அதிமுகவில் இருந்தார். அரசியலில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் நளினி தனது கணவர் ராமராஜனை பிரிந்தபோது உடனே அவரை தொலைப்பேசியில் அழைத்து ‘உனக்கு அண்ணன் நான் இருக்கிறேன். எப்போது எந்த உதவி என்றாலும் என்னை கேள்’ என ஆறுதல் கூறினார் விஜயகாந்த். கடைசியாக அவர் இறந்த போது அவரின் சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நளினி.  உண்மையாகவே ராமராஜனும் கண்கலங்கி இருப்பார்.