விஜய் நடித்த தெறி இந்தி ரீமேக்!.. இப்படியொரு டைட்டிலை வைத்த அட்லீ!.. ஓஹோ அதுதான் காரணமா?..

By Sarath

Published:

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி உடன் நடிகர் விஜய் மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

நடிகர் விஜய்க்கு தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த அட்லி பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார் ஷாருக்கான். கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் மற்ற அனைத்து படங்களின் வசூலையும் சென்ற ஆண்டு கடந்து நம்பர் ஒன் இடத்தை பிடித்து அசத்தியது.

தெறி இந்தி ரீமேக்:

இயக்குனர் அட்லி பழைய படங்களை காப்பி அடித்து புதிதாக மேக்கிங் செய்து வண்டியை ஓட்டி வருகிறார் என்கிற விமர்சனம் அவரது முதல் படமான ராஜா ராணி படத்திலிருந்து இருந்து வருகிறது. ஆனால், காப்பி அடிக்கவில்லை என்றும் அனைத்துமே இன்ஸ்பிரேஷன் தான் என புது உருட்டு உருட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக இயக்குனர் அட்லி முன்னணி இயக்குனராக உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.

ஜவான் படத்தை தொடர்ந்து அட்லி எந்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அதற்கு முழுதாக பாலிவுட்டில் தயாரிப்பாளராக மாறிவிட்டார் அட்லி. தனது உதவி இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிப்பில் தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை உருவாக்கியுள்ளார்.

இதுதான் டைட்டில்:

சமீபத்தில் அந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், தற்போது படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது. மேலும் படம் தேதியில் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் அதிரடியாக இப்போதே அட்லி அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாகவும், சமீபத்தில் பெயருக்காக பூஜை போடப்பட்டு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். தெறி படத்தின் இந்தி ரீமேக் கிற்கு ‘ பேபி ஜான்’ என வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர். அதன் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தனது குழந்தைக்காக போலீஸ் அதிகாரியான விஜயகுமார் வேறு ஒரு இடத்தில் ஜோசப் குருவிலாவாக வாழ்ந்து வருவார். ஒட்டுமொத்த கதையே குழந்தையை மையப்படுத்தி அந்த படம் உருவாகி இருக்கும். தமிழில் நடிகை மீனாவின் குழந்தை பேபி நைனிகா நடித்திருந்தார். இந்நிலையில், பேபியை காப்பாற்றுவதுதான் கதை என்பது போல பேபி ஜான் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

மேலும் படப்பிடிப்பு அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு மே 31-ஆம் தேதி படம் வெளியாகும் என்கிற தயாரிப்பாளர் அட்லி தெரிவித்துள்ளார்.