தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் நடிகை விஜயசாந்தியை சொன்னார்கள். அதன்பிறகு அந்தப் பட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவுக்கு வந்தது.
அவரது தொடர் வெற்றிகளும், அபாரமான நடிப்பும் தான் இதற்குக் காரணம். அதே சமயம் பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக பல கேரக்டர்களில் நடித்து வருவதும் இதற்குக் காரணம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் நடித்துத் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
சமீப காலமாக தமிழ்ப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் டோலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு கைவசம் 3 படங்கள் இருந்தன. என்ன தான் இருந்தாலும் இவருக்கு தமிழ் மற்றும் இந்திப் படங்களில் நடிப்பதற்குத்தான் ஆர்வமாம். இதனால் டோலிவுட்டில் இருந்து வந்த பல பட வாய்ப்புகளையே நிராகரித்தாராம். குறைந்தபட்சம் 1 வருடமாவது இனி டோலிவுட் பக்கம் செல்ல மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியில் ஜவான் என்ற மெகா ஹிட் படத்தில் நடித்துள்ளார். இதுதான் பாலிவுட்டில் அவருக்கு முதல் படம். அதே நேரம் தெலுங்கில் 3 தயாரிப்பாளர்கள் அவரை நடிக்க வைக்க அணுகினார்களாம். இதற்காக நிறைய சம்பளம் தருவதாகவும் ஒப்புக்கொண்டார்களாம்.
2003ல் மலையாளத்தில் மனசினக்கரே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். 2005ல் ஐயா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அதே போல டோலிவுட்டில் லட்சுமி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.
இதுவரை 75 படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் இவருக்கு வெளிவந்த தமிழ்ப்படம் அன்னபூரணி. இது இவரது 75வது படம். இந்தப் படத்திற்காக பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
2023ல் இவர் நடித்த இறைவன் படத்திற்கு 10 கோடியை சம்பளமாகப் பெற்றாராம். அதற்கு முன்பாக இவர் இந்தத் தொகையைப் பெற்ற படம் ஜவான். அந்த வகையில் இரட்டை இலக்கத்தில் சம்பளம் பெற்ற முதல் நடிகை இவர் தானாம்.
டோலிவுட்டில் பாஸ், துளசி, சைரா, நரசிம்ம ரெட்டி, கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
2011ல் இவர் ஸ்ரீராம ராஜ்ஜியத்தில் சீதா தேவியாக நடித்தார். இது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதே சமயம் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். தெலுங்கிலும் நந்தி விருதைப் பெற்றார். 2022ல் இவருக்கு டோலிவுட்டில் வெளியான கடைசி படம் காட்பாதர். இதில் சிரஞ்சீவி, சல்மான்கான் மற்றும் பிறந நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது தான் சல்மான்கானுக்கு முதல் டோலிவுட் படம். இது பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்தது.
1960 முதல் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய 2 தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.