கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதை

பிறந்தது தைப்பூச நன்னாளில்.. மறைந்தது கந்த சஷ்டி நாளில்.. இப்படி ஒரு பாக்கியம் யாருக்காவது கிடைத்திருக்குமா? அவ்வாறு கிடைத்து முருகப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கியவர்தான் பித்துக்குளி முருகதாஸ். அதென்ன பித்துக்குளி முருகதாஸ்..? கோவையில் பிறந்த இவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியன் (இதிலும் முருகன் பெயர்) என்பதாகும்.

பிரும்மானந்த பரதேசி என்ற ஒரு சித்தர் இருந்தார், அவர் உடை ஒன்றும் அணியமாட்டார் ஆனால் அவரது உடலை அவரது தலை முடி மூடி மறைத்தது .அத்தனை நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் . அவர் கோயம்பத்தூரில் நடந்துக்கொண்டிருக்க முருகதாஸ் ஒன்பது வயது பையன் .. தெருவில் கல்லை எரிந்து வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான் . அந்த நேரம் நிர்வாணமாக பிரும்மானந்தர் அந்தப்பக்கம் வந்தார் .

அவரை இந்த நிலையில் பார்த்ததும் “சே என்ன இவர் இப்படி வருகிறாரே என்று நினைத்து ஒரு பயத்தில் கல்லை அவர் மேல் வீசினான். அவ்வளவுதான் அவர் நெற்றியில் அந்தக்கல் பட்டு பொல பொலவென இரத்தம் வழியத்தொடங்கியது.

“டேய் பித்துக்குளி” ! நீயும் என்னைப்போல் ஒரு நாள் ஊர் சுத்தி முருகன் பெயரைச்சொல்லி முன்னுக்கு வரக்கூடியவன். நீ ஏண்டா இப்படி செய்தே?’ என்றபடி தன் நெற்றியில் கையை வைத்தார். என்ன ஆச்சரியம் .உடனே இரத்தம் வடிந்தது நின்று விட்டது . அன்று முதல் அவர் மேல் அளவு கடந்த பக்தி ஏற்பட்டு அவர் அழைத்த பெயரான “பித்துக்குளியையே” தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு பித்துக்குளி முருகதாஸ் ஆனார்.

இந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்

தனது 11-வது வயதில், உப்பு சத்தியாகிரகப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு சில நாட்கள் சிறையில் இருந்தார். பின் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக நாடு தழுவிய சத்தியாகிரகத்தில் பங்கேற்ற போது, ​​அவர் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கடுமையான அட்டூழியத்தால் ஒரு கண்ணில் பார்வை இழந்தார். பின்னர், மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜேந்திர வாடியாரின் திருமணத்தின் போது அரசாங்கத்தின் அடையாளமாக அவர் விடுவிக்கப்பட்டார் .

சிறையிலிருந்து வெளியே வந்து முழு ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அடிக்கடி பழனி குகையிலும் , திருவண்ணாமலை குகையிலும் தியானம் செய்ய ஆரம்பித்தார். பின் வட இந்தியாவுக்குப் பாத யாத்திரையாக பல முக்கிய திருத்தலங்களுக்குப் பயணம் செய்து தன் ஆன்மீக அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் அடிக்கடி விரதங்கள் அனுஷ்டிப்பார். அதில் சஷ்டி, கிருத்திகை, ஏகாதசி, சதுர்த்தி என்று பல மாறி மாறி வரும் இந்த விரதத்துடன் மௌன விரதமும் அடிக்கடி கடைபிடிப்பார்.

பக்தி ரசம் நிறைந்த இவரது முருகன், அம்பிகை, கண்ணன் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர். இவரும் அவர்களை நாம சங்கீர்த்தனத்தை பாடி, மகிழும் வாய்ப்பை கொடுத்தார். தென்ஆப்பிரிக்கர்களுக்காக, இவர் பித்துக்குளி முருகதாஸ் கல்வி அறக்கட்டளையை துவக்கினார். இவரது செல்வங்களை தானமாகக் கொடுத்து, வாலாஜாபேட்டையிவ் உள்ள தீனபந்து ஆசிரமத்தை நிறுவிய ‘பித்துக்குளி‘ முருகதாஸ் தனது 95வது வயதில் கந்த சஷ்டி தினமான 17 நவம்பர் 2015 அன்று காலமானார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews