காமெடி நடிகர்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அந்தக் காலத்தில் நாகேஷ், 80, 90 களில் கவுண்டமணி – செந்தில், 2000-க்குப் பிறகு வடிவேலு, விவேக் என்ற ஜாம்பவான்கள் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் நீங்கா இடம்பெற்றவர்கள். ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்த எவருமே காமெடியில் ஜொலிக்கவில்லை. அதுவும் கவுண்டமணி – செந்தில் கூட்டணிக்கு வாய்விட்டுச் சிரிக்காத ரசிகர்களே இல்லை. இன்றும் மீம்ஸ்களிலும், சோஷியல் மீடியாக்களிலும் இவர்களது வசனங்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.
கவுண்டமணி – செந்தில் கூட்டணி மட்டும் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர். மேலும் வாழைப்பழ காமெடி, நாட்டாமை காமெடி, ஜெய்ஹிந்த், போன்ற படங்களில் காமெடிக் காட்சிகள் இன்றும் வயிற்றைப் பதம் பார்க்கும் கிளாசிக் ரகங்கள். ஆனால் இவர்கள் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தாலும் இவர்களது வாரிசுகள் சினிமாப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை. கவுண்டமணி தனது குடும்பத்தையே மீடியாக்களில் தலை காட்ட விட மாட்டார்.
ஆனால் செந்தில் அவ்வப்போது மீடியாக்களுக்கு குடும்பத்துடன் பேட்டி அளித்து வருகிறார். இவரது வாரிசுதான் சினிமாவில் நுழைந்து பிறகு செட் ஆகவில்லை என்று டாக்டராக மாறியிருக்கிறார்.
கமல், ரகுவரனுடன் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா? இது தெரியாமப் போச்சே…!
செந்திலுடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தான். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லை. தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம்.
அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.
ஆனால் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் ஜனனியின் அப்பா ஜனனியை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் பிறகு மணிகண்டன் டாக்டராகவே மாறியதும் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்தது.
செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்களுடைய மகன் மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.