அந்த காலத்தில் ஒரு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி என்பது பல வாரங்களைக் கடந்து மாதங்களைக் கடந்து வருடக் கணக்கில் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும். அதிலும் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றால் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. இருப்பினும் சில எம் ஜி ஆர் திரைப்படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் லதா கூட்டணியில் அமைந்த சில திரைப்படங்கள் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற தவறியது இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை லதா. இவர் 1973 ஆம் ஆண்டு எம் ஜி ஆரின் சொந்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து எம்ஜிஆரின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பல வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளது. 1975 ஆம் ஆண்டு நாளை நமதே திரைப்படம் லதா நடிப்பில் வெளியானது.கே எஸ் சேதுராமன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். பெரிய எதிர்பார்ப்பு கிடையில் வெளியான இந்த திரைப்படம் 75 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது.
அடுத்து 1976 ஆம் ஆண்டு உழைக்கும் கரங்கள் திரைப்படம் வெளியானது. கே சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கும் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். எம்ஜிஆர் மற்றும் லதா இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஆனால் இந்த திரைப்படமும் நூறு நாட்களை தொடாமல் சுமாரான வெற்றியை பெற்றிருந்தது.
இதை அடுத்து 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நவரத்தினம். ஏ பி நாகராஜன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் மற்றும் லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் 9 கதாநாயகிகள் இணைந்து நடித்து படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைத்திருப்பார்.
ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா! இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்புறவா?
நான்காவதாக நாம் பார்க்கும் திரைப்படம் 1978 ல் வெளிவந்த மதுரை மீட்ட சுந்தரபாண்டியன். இந்த திரைப்படத்தை நடிகர் எம் ஜி ஆர் சொந்தமாக இயக்கி தயாரித்திருப்பார். இதுவே எம்ஜிஆர் நடித்த கடைசி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் நடிகர் எம்ஜிஆர் முதலமைச்சராக பதவியேற்ற பின் வெளியானது. எம் எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த திரைப்படம் 75 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. இந்த நான்கு திரைப்படங்களும் எம்ஜிஆர் மற்றும் லதா இணைந்து நடித்து 100 நாட்களை தொடாமல் தோல்வி படங்களாக கருதப்படுகிறது. அதிலும் நவரத்தினம் திரைப்படத்தை தவிர மற்ற அனைத்து திரைப்படங்களும் 100 நாட்களை தொடாவிட்டாலும் 75 நாட்கள் வரை ஓடி நல்ல வெற்றியை பெற்றிருந்தது.
இதை அடுத்து நடிகர் திலகம் சிவாஜியும் நடிகை லதாவும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் சிவகாமியின் செல்வன். 1974 இல் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் 80 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி நல்ல வெற்றியை பெற்றிருந்தது. ஆனால் நூறு நாட்களை தொட தவறியது. இந்தியில் நன்றாக ஓடிய ஆராதனா திரைப்படத்தை ரீமேக் செய்து இந்த படம் எடுக்கப்பட்டது.