ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா! இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்புறவா?

1965ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று இரவும் பகலும் படம் வெளியானது. இந்த படத்தை பிரமாண்ட தியேட்டர் ஒன்றில் தயாரிப்பாளர் ஜோசப் உடன் படத்தை பார்த்தார் ஜெய்சங்கர். படம் துவங்கியது அறிமுகம் ஜெய்சங்கர் என திரையில் தன் பெயர் வந்ததும் கண்கலங்கி அருகில் இருந்த ஜோசப் கால்களை தன்னிச்சையாக தொட்டு வணங்கினார் ஜெய்சங்கர். துப்பறிவாளனாக இரு மாறுபட்ட வேடங்களில் இரட்டை கதாநாயகனாக தோன்றி நடிகர் ஜெய்சங்கர் இந்த படத்தில் நடித்திருப்பார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஜெய்சங்கர் தனது எதார்த்தமான நடிப்பை இயல்பாக வெளிக்காட்டி இருப்பார். மேலும் படம் முழுக்க ஜெய்சங்கர் வரும் காட்சிகளுக்கு பலத்த கைத்தட்டல்களும் ரசிகர்களிடையே உற்சாக விசில்களும் ஏற்பட்டு திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் அமோக வெற்றியை அடைந்தது.

இரவும் பகலும் படத்திற்கு கிடைத்த வெற்றியில் பாடலுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. டி ஆர் பாப்பா இசையில் இந்த படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவி மிகப்பெரிய வெற்றியை பற்றி கொடுத்தது. அதை அடுத்து கே சங்கர் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடிப்பில் பஞ்சவர்ணக்கிளி திரைப்படம் இரண்டாவதாக வெளியானது. எம்ஜிஆர் மற்றும் சிவாஜி போன்ற முன்னணி கலைஞர்களை இயக்கிய இரட்டையர்களான கிருஷ்ணர் பஞ்சு இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜெய்சங்கருக்கு கிடைத்தது. ஜெய்சங்கரின் மூணாவது படமாக குழந்தையும் தெய்வமும் திரைப்படம் வெளியானது.

இந்த படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைக்க உழைப்போடு, அதிர்ஷ்டமும் ஜெய்சங்கரின் பக்கம் துணை நின்றது. ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திற்கு முதல் ஜனாதிபதி விருதை பெற்று தந்த திரைப்படம் ஜெய்சங்கரின் திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஜெய்சங்கரை வைத்து படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டனர். இரவும் பகலும் படத்தை தொடர்ந்து அறிமுக ஆண்டிலேயே ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.அன்பின் 1966 இல் நடிகை ஜெயலலிதா உடன் ஜெய்சங்கர் இணைந்து  நீ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த நேரத்தில் நடிகை ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றியின் காரணமாக நடிகர் ஜெய்சங்கர் ஜெயலலிதாவிடம் நெருங்கி பழகுவதற்கு சற்று கடினமாக இருந்தது. மேலும் ஜெயலலிதாவும் யாருடனும் அதிகமாக பேசுவதே இல்லை படப்பிடிப்பின் போது காட்சிகள் முடிந்தவுடன் புத்தகம் கையும் ஆக ஓரமாக ஒதுங்கி விடுவார். முதல் நாள் படப்பிடிப்பின் பொழுது பரஸ்பர அறிமுகத்திற்கு பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. படப்பிடிப்பில் ஜெய்சங்கரை கவனித்து வந்த ஜெயலலிதா படத்திற்கு அவர் தரும் ஒத்துழைப்பு யாரிடமும் மரியாதையாக நடந்து கொள்ளும் குண பாகங்களை மதிக்கத் துவங்கினார். ஒருநாள் படப்பிடிப்பின் போது நடிகை ஜெயலலிதா ஜெய்சங்கரை பார்த்து மிஸ்டர் ஜெய் உங்கள் படங்களை நான் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பாக இருக்கிறது அதிலும் பஞ்சவர்ணக்கிளி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது என கூறினார். அதன்பின் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி விலகி நல்ல நண்பர்களாக மாறி ஐந்து திரைப்படங்களுக்கு மேல் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

மீண்டும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் விஜய்! தளபதி 69 திரைப்படத்தின் தெறிக்கவிடும் அப்டேட்!

ஜெய்சங்கர் மீது மிக உயர்வான மதிப்பை கொண்டிருந்தார் நடிகை ஜெயலலிதா. ஒருமுறை தன்னுடன் நடித்த நடிகர்கள் பற்றி கருத்து தெரிவித்து வந்த ஜெயலலிதா ஜெய்சங்கர் ஒரு மிகச்சிறந்த நடிகர். மேலும் ஒரு நல்ல கலைஞர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த மனிதர். நடிப்பின் மீது அசாத்திய ஆர்வம் கொண்டவர். பெரிதாக எந்த பாலிடெக்சிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். மேலும் மற்றவர்களை பற்றி எந்த நிறை குறைகளையும் பொதுவாக பேச மாட்டார் என அவரின் தனித்துவமான குணங்களை ஜெயலலிதா வெளிப்படையாக கூறி ஜெய்சங்கரை புகழ்ந்து பாராட்டினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews