சிவாஜி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்களால் கண்ணதாசனுக்கே நிகழ்ந்த சம்பவம்!

By Velmurugan

Published:

கவிஞர் கண்ணதாசன் சிவாஜியின் பல படங்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்திருந்தாலும் சிவாஜியின் ஒரு படத்திற்காக எழுதிய பாடல் கண்ணதாசனின் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப் போகும் விதத்தில் அமைந்திருந்தது. அது எந்த பாடல் எந்த படத்தில் அந்த பாடல் இடம் பெற்றிருக்கும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

1967ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நெஞ்சிருக்கும் வரை. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி உடன் இணைந்து முத்துராமன் கே ஆர் விஜயா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு சித்ராலயா கோபு வசனம் எழுதி இருப்பார். புது முகங்களை வைத்து படங்களை இயக்குவதை வழக்கமாக வைத்திருந்த ஸ்ரீதருக்கு மீண்டும் சிவாஜியை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக ஸ்ரீதரின் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக சித்ராலயா கோபு இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் மீண்டும் சிவாஜி உடன் இணைந்து எடுக்கும் திரைப்படத்திற்கு சித்ராலயா கோபுவால் வசனம் எழுத முடியாத அளவிற்கு பிஸியாக இருந்துள்ளார்.

இயக்குனர் ஸ்ரீதர் சிவாஜி உடன் மீண்டும் ஒரு திரைப்படம் இயக்க இருப்பது குறித்து சித்ராலய கோபுவை பார்த்து நேரில் சந்தித்துக் கூறினார். ஆனால் சித்ராலயா கோபு அந்த நேரத்தில் அவசர வேலையாக பெங்களூரு செல்ல வேண்டி இருந்தது. உடனடியாக ஒரு முடிவு எடுத்தார் காரில் இங்கிருந்து பெங்களூரு செல்வதற்கு குறைந்தது 6 மணி நேரங்கள் ஆகும். நாம் அந்த ஆறு மணி நேரம் காரின் பயணத்தின் பொழுது இந்த படம் குறித்து முழு கதை மற்றும் திரைக்கதை இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அதற்கு ஏற்ற நடிப்பு கலைஞர்கள் என படம் குறித்த அனைத்து தகவல்களையும் கலந்துரையாடிக் கொண்டு செல்லலாம் என ஒரு முடிவெடுத்தார். அப்படித்தான் சிவாஜியின் திரைப்படம் உருவானது.

இந்த படத்தின் மையக்கதை நடிகர் திலகம் சிவாஜி, முத்துராம் மற்றும் ஒரு நபர் மூவரும் சிறந்த நண்பர்களாக பழகி வருகின்றனர். கல்லூரி படிப்பை முடித்த இந்த மூன்று நபர்களும் வேலைக்காக சென்னை வருகின்றனர். அப்பொழுது கே ஆர் விஜயா வீட்டில் தங்கி வேலை தேடி வரும் இளைஞர்களாக நடித்திருப்பார்கள். அப்பொழுது நடிகர் திலகம் சிவாஜிக்கு கே ஆர் விஜயா மீது ஒருதலையாக காதல் ஏற்படுகிறது. ஆனால் கே ஆர் விஜயா நடிகர் முத்துராமனை மனதார காதலித்து வருவார். அதன்பின் சில நாட்களில் நடிகர் முத்துராமனுக்கு வேலை கிடைத்து வெளியூர் சென்று விடுவார். அதே நேரத்தில் கே ஆர் விஜயாவின் தந்தை உடல்நல குறைவின் காரணமாக படுத்த படுக்கையாகி விடுவார். தம் மரணத்தின் இறுதி கட்டத்தில் கே ஆர் விஜயாவின் தந்தை நடிகர் சிவாஜியை அழைத்து என் மகளை உன் தங்கையாக ஏற்றுக் கொண்டு அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கூறி இறந்து விடுவார்.

அமெரிக்க நகரின் ஒரு நாள் மேயராக மாறிய சிவாஜி! வியப்பில் திரையுலகம்!

ஒருதலையாக காதலித்த பெண்ணை தங்கையாக ஏற்றுக் கொண்டு அவளுக்கு பிடித்த காதலன் முத்துராமனை கணவனாக மாற்றி திருமணம் செய்து வைப்பார் சிவாஜி. அப்பொழுது தான் இந்த படத்தில் பூ முடிப்பார் என் பூங்குழலி பாடல் இடம் பெறும். இன்றளவும் பல திருமண வீடுகளில் இந்த பாடல் ஒலித்து இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

இந்த பாடல் கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது நடிகர் கண்ணதாசனின் மகளுக்கு அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கும். அப்பொழுது அவர் கையில் பணம் இல்லாத காரணத்தினால் சற்று சிரமத்தில் இருந்திருப்பார். ஆனால் அவருக்கு எதிர்பாராத விதமாக அனைத்து பண உதவிகளும் உடனடியாக கிடைக்கும் திருமணமும் சிறப்பாக நடைபெறும். திருமணம் நடைபெற்ற பிறகு மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் கண்ணதாசனின் கால்களில் விழும் பொழுது ரேடியோக்களில் பூ முடிப்பால் என்னும் பூக்களளி பாடல் ஒலிக்க பெரும். இதை கண்டு ஆச்சரியமடைந்த கண்ணதாசன் அருகில் எம் எஸ் விஸ்வநாதனின் கச்சேரி ஒன்றில் இந்த பாடல் பாடியிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். படத்திற்காக அவர் எழுதிய பாடல் நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.