அமெரிக்க நகரின் ஒரு நாள் மேயராக மாறிய சிவாஜி! வியப்பில் திரையுலகம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1962 ஆம் ஆண்டு அமெரிக்க குழந்தைகளுக்கு யானை குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த தகவலை அறிந்த அமெரிக்க ஜனாதிபதி ஆஃப் கென்னடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரகம் சிவாஜி பற்றி முழு விவரங்களையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. அவற்றை பார்த்து படித்து தெரிந்து கொண்ட கென்னடி கலாச்சார பரிமாற்ற திட்டத்தின் கீழ் நடிகர் சிவாஜியை அமெரிக்கா அரசின் விருந்தினராக இந்திய அரசின் தூதராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த சுற்றுப்பயணங்களை செல்வதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே நடிகர் சிவாஜிக்கு பல பாராட்டு கூட்டங்களும் வழியனுப்பு விழாவும் நடத்தப்பட்டது.34 வயதுடைய சிவாஜியை வியக்கும் அளவிற்கு அந்த விழாக்கள் ஒவ்வொன்றும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் சிவாஜி இந்த சுற்றுப்பயணத்தை முடித்து திரும்புவதற்கு இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் தன் கையில் வைத்திருந்த அனைத்து படங்களிலும் மிக வேகமாக நடிக்க துவங்கினார். 18 மணி நேரங்களுக்கு மேலாக தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு அனைத்து படங்களிலும் மிகச் சிறப்பாக நடித்து முடித்து அதன் பின் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சிவாஜி.

நடிகர் சிவாஜி உடன் வெளியுறவுத்துறை அதிகாரி மற்றும் இரண்டு நண்பர்கள் மட்டும்தான் அமெரிக்காவை சுற்றி பார்க்க சென்றிருந்தனர். பொதுவாக அமெரிக்க திரை உலகின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவருமே எங்கு செல்வதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பர தூதர், போயிட்டியாளர்கள் என ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் சிவாஜி மிக எளிமையுடன் வந்திருப்பதை பார்த்து அமெரிக்க திரையுலகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இதை அடுத்து சுற்றி பார்க்க சென்ற இடங்களில் எல்லாம் நடிகர் திலகம் சிவாஜியை பார்த்து உங்களது குடும்ப வாழ்க்கை எப்படி இவ்வளவு ரகசியமாக இருக்கிறது. வாழ்க்கை குறித்த தகவல்களை நிருபர்கள் மோப்பம் பிடித்து விடாமல் இருக்க என்ன யுக்தியை கையாண்டு வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வந்தனர்.

அதற்கு சிவாஜி எங்கள் திரை உலகை சார்ந்த நண்பர்கள் எல்லோரும் நான் எந்த படத்தில் நடிக்கிறேன், அந்த படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம், எனக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற விவரங்களை மட்டுமே பத்திரிக்கையில் விளம்பரப்படுத்துவார்கள். என் சொந்த வாழ்க்கையில் தலையிடுவது இல்லை என கூறினார். அதைத்தொடர்ந்து உங்கள் திரை வாழ்க்கையில் முத்த காட்சிகளுக்கு அனுமதி இல்லை அது ஏன் என்றும், ஒரு ஆணும் பெண்ணும் அன்பை வெளிக்காட்டுவது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு சிவாஜி லேசாக கட்டி அணைப்பது, கைகளை கோர்த்துக் கொள்வது மூலமாக எங்கள் காதல் அன்பை வெளி காட்டுவோம் அதுவே போதுமானது என்று கூறினார்.

மீண்டும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் விஜய்! தளபதி 69 திரைப்படத்தின் தெறிக்கவிடும் அப்டேட்!

அதன் பின் தொலைக்காட்சி நடிகர்களின் பயிற்சி பள்ளிக்கும் சென்று பார்வையிட்டுள்ளார். ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் என்ற அரங்கத்தை போல சென்னையில் பல அரங்குகளை உருவாக்க வேண்டும் என்பதை அந்த இடத்தில் அவர் உறுதிமொழியாக எடுத்துக் கொண்டார். ஊரை சுற்றி பார்ப்பதை விட அங்குள்ள சினிமா ஸ்டுடியோ கலை சுற்றி பார்ப்பதிலேயே நடிகர் திலகம் சிவாஜி ஆர்வம் கொண்டிருந்தார். உலகப் புகழ்பெற்ற கொலம்பியா பிச்சர்ஸ், 28 செஞ்சரி பாக்ஸ், எம்ஜிஎம் மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோக்களை சுற்றி பார்த்தார்.

அதன் பின் இந்த கௌரவத்திற்கு எல்லாம் மகுடமாக நியூயார்க் நகரின் நயாகரா கௌரவ மேயராக ஒரு நாள் நியமிக்கப்பட்டார் நடிகர் திலகம் சிவாஜி. நகரத்தின் தங்க சாவியும் அவர் கையில் வழங்கப்பட்டது. சிவாஜிக்கு முன்பு இந்த மரியாதையை பெற்ற ஒரே இந்தியர் முந்தைய பிரதம மந்திரி நேரு மட்டும் தான். பல நாள் அமெரிக்க சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்ஜிஆர் மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து நடிகர் சிவாஜி எம்ஜிஆர் தலைமையிலான நடிகர் சங்க குழு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மேலும் அவருக்கான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews