இப்படியும் ஒரு சகோதரி நடிகைகளா.. தமிழ் திரையுலகையே திரும்பி பாக்க வெச்ச இரண்டு பேரின் பெயர்..

இந்திய திரை உலகில் பல சகோதரர்கள் நடிகர்களாகவும், பல சகோதரிகள் நடிகைகளாகவும் நடித்துள்ளனர். அம்பிகா – ராதா, ஊர்வசி – கல்பனா, சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ் என பல சகோதரர்…

jr sr sriranjini

இந்திய திரை உலகில் பல சகோதரர்கள் நடிகர்களாகவும், பல சகோதரிகள் நடிகைகளாகவும் நடித்துள்ளனர். அம்பிகா – ராதா, ஊர்வசி – கல்பனா, சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ் என பல சகோதரர் சகோதரிகளை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பல சகோதரிகள் நடித்திருந்தாலும் ஒரே பெயரில் சகோதரி நடிகைகள் நடித்தது பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

ஸ்ரீ ரஞ்சனி சீனியர் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி ஜூனியர் என இரு சகோதரிகள் தமிழ் திரை உலகில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீரஞ்சனி சீனியர் 1939 ஆம் ஆண்டு வெளியான வந்தே மாதரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். வெள்ளையர் காலத்தில் மிகவும் தைரியமாக இந்த படம் உருவாக்கப்பட்டது அந்த காலத்தில் பரவலாக பேசப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் சாரங்கதாரா, சதி துளசி, ஸ்ரீ கிருஷ்ண லீலா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவர் மொத்தமே கிட்டத்தட்ட பத்து படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் 1930 கள் மற்றும் 40களில் பிரபலமான நடிகையாக இருந்தார். அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த 1936 ஆம் ஆண்டு வெளியான மாயா பஜார் என்ற படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.

senior sriranjani

மேலும் லவகுசா உள்பட சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்தார். இவருடைய சகோதரி தான் ஜூனியர் ஸ்ரீ ரஞ்சனி. இருவருக்குமே இயற்பெயர்கள் வெவ்வேறு என்றாலும் சினிமாவுக்காக ஸ்ரீ ரஞ்சனி என்ற பெயரையே இருவருமே பயன்படுத்தினர்.

ஸ்ரீரஞ்சனி ஜூனியர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடித்த பக்த துக்காராம் உள்பட பல தெலுங்கு படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தமிழில் இவர் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி என்ற திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்தார். கல்யாணி என்ற கேரக்டர் தான் அவரது தமிழ் திரை உலக வரலாற்றில் மிகப்பெரிய புகழ்பெற்ற கேரக்டர் ஆகும். சிவாஜிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் சகஸ்ரநாமம் ஆகிய மூவரின் சகோதரியாக அந்த படத்தில் நடித்திருப்பார் ஸ்ரீரஞ்சனி ஜூனியர். அவருடைய கேரக்டரை மையமாக வைத்து தான் அந்த படமே உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்  ராஜி என் கண்மணி போன்ற படங்களில் நடித்தார். இந்த திரைப்படம் சார்லி சாப்ளின் படத்தின் ரீமேக்காகும். இதனையடுத்து அவர் எம் ஆர் ராதா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் அவருடைய மனைவியாக நடித்திருப்பார். ஒரு அமைதியான குடும்ப பெண்ணாக மிகவும் உருக்கமான கேரக்டர் அவருக்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருந்ததடன் அந்த கேரக்டரை அவர் மிக அழகாக கையாண்டிருந்தார்.

senior sriranjani2

மேலும் சந்தானம், உமா சுந்தரி,  மகாகவி காளிதாஸ், சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த 1971 ஆம் ஆண்டு அவர் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்த நிலையில் அதே ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஸ்ரீதஞ்சனி சகோதரிகள்  பல படங்களில் நடித்துள்ளதுடன் ஜூனியர், சீனியர் என இரண்டு பேரும் ஒரே பெயரில் நடித்தது தான் அந்த காலத்திலேயே அவர்கள் பற்றி அதிகம் பேசவும் காரணமாக அமைந்திருந்தது.