கவியரசு கண்ணதாசன் தனது காதல், தத்துவ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவர். மனிதர்களின் எந்த உணர்வுகளுக்கும் கண்ணதாசன் பாடல்களை உதாராணமாகக் குறிப்பிடலாம். தனது எழுத்தாணியால் சினிமா உலகை ஆண்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு துருவங்களுக்கும் தனது பேனா முனையால் பல ஹிட் பாடல்களை எழுதிக் கொடுத்தவர். ஆனால் இப்படிப்பட்ட கவியரசு இயக்குனர் கே.பாலச்சந்தர் கூறிய ஒரு காட்சிக்கு பாடல் எழுத முடியாமல் திணறிய சம்பவமும் அரங்கிகேறியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெண்களின் முன்னேறத்தை மையப்படுத்தி இயக்கும் இயக்குநர்களில் கே.பாலசந்தர் முதன்மையானவ்ர். 1974-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படம் இன்றளவும் பெண்களின் வலியை உணர்த்துகிற ஒரு படமாக இருக்கிறது. இந்த படத்தில் அண்ணன் தங்கையை திட்டுகிறார் இதில் குடும்ப உறவுகளை மையப்படுத்திய பாட்டாக இல்லாமல் ஒரு ஞானி பாடும் பாடலாக இருக்க வேண்டும் என்று கே.பாலச்சந்தர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி டியூன் தயார் செய்து வைத்துள்ளார். கே. பாலச்சந்தர் எம்.எஸ்.வி கண்ணதாசன் மூவரும் பாட்டு எழுதுவதற்காக அமர்கின்றனர். முதல் நாள் எதுவும் வரவில்லை. அதனைத் தொடர்ந்து மூவரும் 2-வது நாள் அமர்கின்றனர். அப்போவும் எதுவும் வரவில்லை.
இதனால் கோபமாக கண்ணதாசன் அண்ணன் தங்கையை திட்டுகிறான் இதற்கு மெலோடி டியூன் போட்டு வச்சிருக்க டியூன மாத்து என்று எம்.எஸ்.வியிடம் சொல்ல அவரோ அண்ணன் தங்கையை திட்டினால் அது பாசமான திட்டாகத்தான் இருக்கும் அதனால் டியூனை மாற்ற முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் 2-வது நாளும் பாட்டு எழுத முடியாத சூழல் வருகிறது.
அடுத்து 3-வது நாள் அமர்கின்றனர். ஆனால் அப்போதும் எதுவும் பாட்டு எழுத முடியாததால் எம்.எஸ்.வி கம்பெனி காரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு விட்டார். அவரை விட்டுவிட்டு வந்து அதே காரில் கண்ணதாசன் வீட்டுக்கு போக வேண்டும். அதனால் படத்தின் தயாரிப்பு அலுவலகத்தில் கண்ணதாசன் இருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?
அந்த நேரத்தில் கண்ணதாசன் தனக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருமாறு தயாரிப்பாளரிடம் சொல்கிறார். ஆனால் அவரோ 3 நாட்களாக ஒரு பாட்டு எழுத முடியவில்லை. இதெல்லாம் உனக்கு வாங்கி கொடுக்கனுமா? இந்த மழைக்கு நீ ஒதுங்க என் ஆபீஸ் இருக்குனு சந்தோஷப்பட்டுக்க என்று சொல்கிறார். இதனால் கோபமான கண்ணதாசன் உன் ஆபீஸ் இல்லை என்றால் எனக்கு வேறு இடமே இல்லை தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்று சொல்கிறார்.
எதேச்சையாக வந்த இந்த வார்த்தையும் எம்.எஸ்.வி போட்ட டியூனும் சரியாக இருந்ததால், வீட்டுக்கு போன எம்.எஸ்.வியை மீண்டும் ஆபீஸ்க்கு வர செல்லி பாடலை எழுத தொடங்குகிறார் கண்ணதாசன் அப்போது உருவான பாடல் தான் தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… படத்தின் தயாரிப்பாளர் கூறிய ஒற்றை வார்த்தையால் கண்ணதாசன் ஒரு ஹிட் பாடலை கொடுத்துள்ளார்.மேற்கண்ட தகவலை கே.பாலச்சந்தர் கூறியதாக நெல்லை ஜெயந்த் குறிப்பிட்டுள்ளார்.