சம்பவம் செய்த தனுஷ்.. போட்டியிட்ட மற்ற படங்களை அடித்து தூள் கிளப்பிய கேப்டன் மில்லர்!

By John A

Published:

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் இன்று வெளியாகி மாஸ் கிளப்பியிருக்கிறது. இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். தனது சாணிக் காயிதம், ராக்கி படத்திற்குப் பின் நேர்த்தியான கதையை உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கியுள்ளார் அருண்மாதேஸ்வரன்.படத்தைப் பார்த்தவர்கள் ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தள்ளுகின்றனர்.

தனுஷ், சிவ்ராஜ்குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். பீரியட் படமாக உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் படத்துடன் போட்டியிட்ட மற்ற படங்களான அயலான், மெரி கிறிஸ்துமஸ், சேப்டர் மிஷன் 1 ஆகிய படங்களை ஓரங்கட்டி தனுஷ் பொங்கல் ரேஸில் முன்னணியில் இருக்கிறார். மேலும் பொங்கல் வெளியீடாக இருந்த லால்சலாம் கடைசி நேரத்தில் பின்வாங்கியது.

என்ன மாலையெல்லாம் தூக்கி அடிக்கிறாய்ங்க!.. விஜய் கொஞ்சம் உஷாரா வெளியே வரதே நல்லது!..

கேப்டன் மில்லர் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். தனுஷின் அசுர உழைப்பு இந்தப் படத்திற்கு வீண் போகவில்லை என்றும், படத்தின் ஆக்சன் காட்சிகள் சூப்பராக உள்ளது எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். கர்ணன், அசுரன் படத்திற்குப் பிறகு தனுஷ்-ன் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படும் எனவும், படத்தின் இரண்டாம் பாதி ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாகவும் படத்தைப் பார்த்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டதால் இதில் ஜி.வி.பிரகாஷ் அதை நிறைவேற்றியிருப்பாரா என்ற எதிர்பார்ப்பில் வந்தவர்களுக்கு அதைவிட கூடுதல் சிரத்தை எடுத்து இசையில் மேஜிக்கை கேப்டன் மில்லரில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மில்லர் தனுஷ்க்கு அடுத்த தேசிய விருதைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் படம் பார்த்தவர்கள் அவரின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படத்தின் அறிமுகக் காட்சியும், இண்டர்வெல் காட்சியும் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்களை Vibe Mode ல் வைத்திருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இப்படம் ஒரு லைப் டைம் செட்டில் மெண்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.