என்ன மாலையெல்லாம் தூக்கி அடிக்கிறாய்ங்க!.. விஜய் கொஞ்சம் உஷாரா வெளியே வரதே நல்லது!..

அரசியல் கனவு வந்த நிலையில், அதிரடியாக இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நடிகர் விஜய் பொதுமக்களையும் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்காக வெங்கட் பிரபு பொத்தி பொத்தி வைத்திருந்த லுக்கையே தாராளமாக ரிவீல் செய்து விட்டார் நடிகர் விஜய்.

எப்படி இருந்தாலும் யாராவது லீக் செய்து விடுவார்கள் என்பதால் நடிகர் விஜய்யே நேரடியாக சென்னையில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வரும் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

மீண்டும் ரசிகர்களை சந்தித்த விஜய்:

நேற்று சாயம் போன சட்டையை அணிந்து கொண்டு மீசை இல்லாத லுக்கில் வந்து போஸ் கொடுத்த விஜய் இன்று கலர் சட்டையை அணிந்துக் கொண்டு ரசிகர்களை சந்தித்துள்ளார்.

கேரவன் மீது ஏறி ரசிகர்களுக்கு விஜய் போஸ் கொடுத்துள்ள நிலையில், ரசிகர்கள் விஜய்க்கு மலர் தூவுவது வரை ஓகே. ஆனால், சில ரசிகர்கள் மாலையையே தூக்கி அடிக்கின்றனர். அதெல்லாம் ரொம்ப ஓவர். ஏற்கனவே மகன் விஜய்யாக நடிக்க உடல் எடையை எல்லாம் குறைத்து வெட வெடன்னு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.

மாலைகளை தூக்கி எறியும் ரசிகர்கள்:

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்த சென்ற போது சிலர் செருப்பு தூக்கி வீசி அறிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் விஜய் வெளியே ரசிகர்களை சந்திக்கும் போது கொஞ்சம் உஷாரா இருப்பது நல்லது என்கின்றனர்.

யாராவது வன்மம் காரணமாக எதையாவது தூக்கி அடித்து விட்டால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு விடும். நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி வரும் நிலையில், ரசிகர்களும் தூரத்தில் இருந்து அவரை ரசித்து விட்டு செல்வதே சிறப்பு என்றும் தேவையில்லாத வேலைகளில்  ஈடுபட வேண்டாம் என ரசிகர்களே கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அப்பா, மகன் என இரு வேறு தோற்றங்களில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இரண்டு தனித்தனி நபரா அல்லது டைம் டிராவல் போன்ற கதையை வெங்கட் பிரபு படம் எடுக்கிறாரா? என ஏகப்பட்ட கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் விஜய் அடுத்து சில ஆண்டுகள் ஓய்வெடுத்து அரசியலில் தீவிரம் காட்டப் போவதாகவும் கூறுகின்றனர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ 125 கோடிக்கு விற்பனையான நிலையில், தி கோட் படம் 150 கோடிக்கும் மேல் விற்பனையாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...