தளபதி விஜய் இன்று ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராகத் திகழ்கிறார். இவரிடம் இல்லாத கார்களே இல்லை என்னும் அளவிற்கு பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ளார். மேலும் இவருக்கு தானே டிரைவிங் செய்வதும் மிகவும் பிடித்த ஒன்று.
அப்படி இருக்க இவரின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் சினிமாவில் அப்போதுதான் முன்னேறிக் கொண்டிருக்கையில் ஸ்கூட்டர் மட்டுமே வைத்திருந்தார். ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களை அவர் இயக்கியிருந்த போதும் அவரிடம் கார் இல்லாமல் இருந்தது. அப்படி ஒரு முறை கோடம்பாக்கம் அருகே தனது மனைவி ஷோபா மற்றும் மகன் விஜய்யுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் SAC. அவர்களின் பின்னால் காரில் வந்த ஜெய்சங்கர், சந்திரசேகரை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வா என சொல்லிவிட்டு போனார்.
இதனையடுத்து ஜெய்சங்கர் வீட்டுக்கு SAC போக, அங்கே நின்று கொண்டிருந்த FIAT காரை எடுத்து கொண்டு செல்லும் படி கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறி SAC மறுக்கவே, பணமில்லாமல் காரை எடுத்துக் கொண்டு போகும் படி ஜெய்சங்கர் கூறியதாகவும், பணம் கிடைக்கும் போது கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆறு மாத காலத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் வீதம், காருக்கான கடனையும் SAC கழித்துள்ளார்.
பலருக்கும் தெரியாத மீசை முருகேசனின் மறுபக்கம்.. சவுண்ட் இன்ஜினியருக்கே சவால் விடும் அலாதி திறமை
இப்படி சினிமாவில் பலரது நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்துள்ளார் ஜெய்சங்கர். தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி வைத்தால் கூட கேட்க மாட்டார். மேலும் படம் நஷ்டம் அடைந்தால் தயாரிப்பாளருக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்து சினிமாவில் ஆரோக்கியமான அணுகுமுறைக்கு வித்திட்டவர் ஜெய்சங்கர்.
இவ்வாறு சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யின் தந்தைக்கு ஜெய்சங்கர் செய்த இந்த உதவி பலரையும் நெகிழ வைத்தது. இன்று அதே வழியில் எஸ்.ஏ.சந்திரசேகரும், விஜய்யும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருவதை கண்கூடாகக் காண்கிறோம். அண்மையில் தளபதி விஜய் நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியது, பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு நிதி வழங்கியது, மேலும் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல நற்பணிகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.