பலருக்கும் தெரியாத மீசை முருகேசனின் மறுபக்கம்.. சவுண்ட் இன்ஜினியருக்கே சவால் விடும் அலாதி திறமை

விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன பூவே உனக்காக படத்தில் தினமும் இரவில் பாட்டுப் பாடி ஊரையே எழுப்பி விடும் காமெடி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தான் மீசை முருகேசன். அதற்குமுன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் பூவே உனக்காக படம்தான் இவருக்கு அடையாளத்தைக் கொடுத்தது. தன்னுடைய முறுக்கு மீசையாலும், வளர்ந்து உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்டதால் இவருக்கு மீசை முருகேசன் என்ற அடைமொழி வந்தது.

மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் அறிமுகமான மீசை முருகேசன் அடிப்படையில் ஒரு இசைக் கலைஞர் ஆவார். வாய் மூலம் இசைக்கும் மோர்சிங் என்ற இசைக்கருவியை இயற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் தவில் வித்வானாகவும் இருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவில் பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார்.

இதுமட்டுமல்லாது கே.பி.சுந்தரம்மாள், தியாகராஜா பாகவதர், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா, குனனக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசை மேதைகளிடம் பணியாற்றியிருக்கிறார். ஏராளமான நாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

கே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.

மேலும் ஆண்பாவம், பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் பல திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

சினிமா பாணியில் நடிகையை கடத்தி திருமணம் செய்த அந்தக் கால சூப்பர் ஸ்டார்.. அப்பவே இப்படியா..!

கையிலும், வாயிலும் பல்வேறு பழங்கால இசைக் கருவிகளையும், புதிது புதிதான சப்தங்களை உருவாக்குவதிலும் மீசை முருகேசன் வல்லவராகத் திகழ்ந்தார். அதனால் தான் இவரை அந்தக்கால ரசூல் பூக்குட்டி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போது நாம் திரையில் கேட்கும் வித விதமான பின்னணி இசையை தனது கை மற்றும் வாய்களாலேயே செய்து பல இசையமைப்பாளர்களை பிரம்மிக்க வைத்தவர்.

தேங்காய் ஓட்டையும் கூட தனது அலாதி இசை திறமையால் வாத்தியக் கருவியாக மாற்றுவார். தன்னிடம் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதை இசைக் கருவியாக மாற்றி வித விதமான ஒலிகளை எழுப்பி அசர வைக்கும் அலாதி திறமை கொண்டவர் இந்த மீசை முருகேசன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.