கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பர்.. கிருஷ்ணாவாக இருந்த நடிகர் ‘கவிதாலயா’ கிருஷ்ணன் ஆனது எப்படி?

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இயக்குனர் பாலச்சந்தரை சேரும். இன்று இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் கூட பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகம் ஆனவர் தான். அதே போல அவரது தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா பிலிம்ஸ் மூலமும் நிறைய சிறந்த படைப்புக்களை தமிழ் சினிமாவுக்காக அவர் வழங்கி உள்ளார்.

அந்த வகையில் பாலச்சந்தரின் படங்களில் அதிகம் நடித்து கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் கிருஷ்ணா. இவர் ஒரு மிகச்சிறந்த நாடக நடிகராக இருந்ததுடன் சிறு வயது முதலே நாடகத்தில் நடித்தார். அதிலும் பெரும்பாலும் பாலச்சந்தர் நாடகத்தில் அவர் நடித்துள்ளார். கிருஷ்ணன் தனது வாழ்நாளில் இதுவரை 2500 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது நாடகக் கலை திறமையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு விருதும் வழங்கியுள்ளது.

மேலும் கிருஷ்ணன் 120 திரைப்படங்கள் 60 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்தில் தான் கிருஷ்ணன் முதலில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவர் கவிதாலயா தயாரித்து பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடித்ததால் கவிதாலயா கிருஷ்ணன் என திரையுலகினர்களால்  அழைக்கப்பட்டார்.

krishnan1

சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், கேளடி கண்மணி, ஒரு வீடு இரு வாசல், அழகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, டூயட்  உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன், கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள்,   உள்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். சக ஆட்டோ ஓட்டுநராக அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும்.

அதேபோல் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்திலும் அவரது காமெடி சூப்பராக இருக்கும். கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திரையுலகில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கூட அவர் ஆர் யூ ஓகே பேபி, ஷார்ட் பூட் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

krishnan

திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் ஏராளமாக நடித்துள்ளார். பாலச்சந்தர் இயக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ரயில் சிநேகம், என்ற தொலைக்காட்சி தொடரில் கதிரவன் என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பின் காதல் பகடை, மர்மதேசம், ரம்யா, ரமணி, அலைகள், பொண்டாட்டி தேவை, செல்வி,  அண்ணி, அமுதா ஒரு ஆச்சரியக்குறி, வாணி ராணி, ரோஜா, சூரிய வம்சம்  உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதேபோல் அவர் ட்ரிபிள் எக்ஸ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.  கவிதாலயா கிருஷ்ணன் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது அவருடன் படித்தவர் தான் கிரேசி மோகன் என்பதும் கிரேசி மோகன் நாடகத்திலும் ஏராளமாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews