ஸ்ரீராமருக்கு அயோத்தியில் கோவில் எழுப்பியது ஏன்னு தெரியுமா…? அடேங்கப்பா கோவிலில் இத்தனை சிறப்பம்சங்களா…!

By Sankar Velu

Published:

ராமருக்கு என்று ஒரு கோவில், ராமஜென்ம பூமி தேவைப்படுகிறது. கடவுள் எல்லா இடத்திலும் தானே இருக்கிறார். பிறகு எதற்கு கோவில் என்று ஒரு சில அதிபுத்திசாலிகள் கேள்வி எழுப்புவர். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்பது சனாதன தர்மம். காற்றும் எல்லா இடத்திலும் இருக்கிறது. பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

ஆனால் காற்றில் தான் உள்ளதே எதற்காக அவர் கஷ்டப்படுகிறார் என்று கேள்வி எழலாம். அவருக்கு தேவையான ஆக்சிஜனைக் காற்றில் இருந்து இழுக்கத் திறனில்லை. அதே போலத் தான் கடவுளும். அவர் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் கடவுளை கவர்ந்து இழுக்க நமக்குத் திறன் இல்லை. அதனால் தான் கோவிலில் வைத்து கடவுளை வழிபடுகிறோம்.

Ayothi
Ayothi

பாசிட்டிவ் எனர்ஜியும், அந்த வைப்ரேஷனும் இருப்பதால் தான் கோவிலுக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது. அதை உணர்ந்து கொள்வதற்காகத் தான் ஆகம சாஸ்திரப்படி கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். ராமஜென்ம பூமிக்கு ஏன் பிரச்சனை என்றால் அவரது ஜாதகம் அப்படி இருந்தது. அதனால் தான் 14 ஆண்டுகள் வனவாசம் கூட இருக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு அவர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து இருக்கிறார்கள். அதற்கான சான்றும் கண்டுபிடிக்கப்பட்டது.அதன்பிறகே தற்போது மத்திய அரசின் முயற்சியால் கோவில் கட்டப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அந்தக் கோவிலின் சிறப்புகள் என்னென்ன என்று பார்ப்போமா…

அயோத்தி ராமர் கோவில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளைக் கொண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நீளம் 380 அடி, 250 அடி அகலம், 161 அடி உயரம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. அவற்றில் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளன. கோவிலின் பிரதானமான கருவறையில் ராமர் சிலையும், முதல் தளத்தில் ஸ்ரீராமரின் தர்பாரும் அமைந்துள்ளது.

கோவிலில் நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம், கீர்த்தனை மண்டபம் என மொத்தம் 5 மண்டபங்கள் உள்ளன. கோவிலில் எங்கு பார்த்தாலும் தெய்வங்களின் சிலைகள் உள்ளன. ஒவ்வொரு தூண்கள், சுவர்களில் எல்லாம் தெய்வங்களின் சிலைகள் தான்.

கோவிலின் கிழக்கு திசையில் இருந்து 32 படிக்கட்டுகளைப் பயன்படுத்தி பக்தர்கள் கோவிலுக்குள் நுழையலாம். கோவில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு என்று பல கோவில்கள் உள்ளன.

அதே போல் வடக்கு பகுதியில் அன்னபூரணியின் ஆலயமும், தெற்குப் பகுதியில் அனுமன் ஆலயமும் உள்ளன. கோவில் அருகே, வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால கிணறு உள்ளது.

கோவில் வளாகத்தில் மகரிஷி வால்மீகி, மகரிஷி, வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அகல்யாவின் மனைவி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

;கோவிலின் தென்மேற்குப் பகுதியில், ஜடாயு சிலை உள்ளது. இதே போல் பகவான் சிவனின் பழங்கால கோயில் மீட்கப்பட்டுள்ளது. கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் கோவில் கட்டுமானத்தில் எந்த இடத்திலும் இரும்பு பயன்படுத்தவே இல்லை.

கோவிலின் அடித்தளமானது 14 மீட்டர் தடிமனான ரோலர்-காம்பாக்ட் செய்யப்பட்ட காங்க்ரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு செயற்கைப் பாறை போலவே இருக்கும். நிலத்தடி ஈரப்பதத்தில் இருந்து கோவிலைப் பாதுகாப்பதற்காக கிரானைட்டைப் பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீ பாதுகாப்புக்கான நீர் வழங்கல் மற்றும் ஒரு மின்நிலையம் உள்ளது. கோவிலில் 25 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வசதியாகக் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. யாத்ரீகர்கள், மருத்துவ வசதிகள் மற்றும் லாக்கர் வசதிகள் இருக்கும்.

கோவில் வளாகத்தில் குளியலறை வசதிகள், கழிப்பறைகள், கைகழுவும் தொட்டிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. கோவில் முற்றிலும் பாரதத்தின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.

70 ஏக்கர் பரப்பளவில் 70 சதவீத பசுமையும் சேர்ந்தே இருப்பதால் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்துக் கட்டப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் நாள் அமெரிக்கா டைம் ஸ்கொயர் சேனலில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாம்.