நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பை சோதித்துப் பார்த்த உதவி இயக்குனர்! நெத்தியடி பதில் கொடுத்த சிவாஜி!

By Velmurugan

Published:

நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவில் உலகம் போற்றும் ஒரு அசாத்திய நடிகராக வாழ்ந்து வந்தார் என்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஓர் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட அசாத்திய நடிகரை படம் எடுக்கும் இயக்குனர் ஒருவர் சோதித்துப் பார்த்தால் பெரிய நிகழ்வு அல்ல. ஆனால் அதற்கு பதிலாக இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சிறிய இயக்குனர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜியின் திறமையை சோதித்துப் பார்த்துள்ளார் என்பது சற்று வியப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது. இந்த சோதனையை நடிகர் திலகம் சிவாஜி எப்படி சாதனையாக மாற்றியுள்ளார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1954 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி, பண்டரிபாய், ஜாபர் சீதாராமன் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் அந்த நாள். இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருப்பார்‌. மேலும் படத்தை எஸ். பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்காக ஜாபர் சீதாராம் திரைக்கதை எழுதியது மட்டுமல்லாமல் ஓர் துப்பறியும் அதிகாரியாகவும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் புதுமைக்கு வித்திட்ட திரைப்படம் ஆக அந்த நாள் திரைப்படம் அமைத்திருக்கும். அன்றைய காலகட்டத்தில் பொதுவாக ஒரு திரைப்படம் என்பது நான்கு பாடல் காட்சிகள், நான்கு காமெடி காட்சிகள், அத்துடன் சில செண்டிமெண்ட் காட்சிகள் இணைந்த தொகுப்பாகவே அமைந்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பாடல் கூட இல்லாமல் திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் அந்த நாள். அந்த காலத்து திரை ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் உண்மையில் மிக வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கும்.

அந்த நாள் திரைப்படத்தின் மையக்கதை இந்த படத்தின் தொடக்கத்திலேயே படத்தின் ஹீரோ கொலை செய்யப்படுகிறார். ஹீரோவை யார் கொலை செய்திருப்பார் என்பதை விசாரிக்கும் நோக்கிலேயே படம் நகர்கிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களையும் விசாரிக்கும் முறை மற்றும் படத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகமாக ஏற்படுத்திருக்கும். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய விதத்தில் இந்த திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படம் ஆக வெற்றி பெற்றது. இந்த படத்தின் இயக்குனராக இருந்த எஸ் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் முக்தா சீனிவாசன். உதவி இயக்குனராக இருந்த முக்தா சீனிவாசனுக்கும் படத்தில் ஒரு நடிகராக நடித்து வந்த ஜாபர் சீதா ராமருக்கும் நடிகர் திலகம் சிவாஜி என் மீது ஓர் சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை ஓரம் கட்ட ஜெயலலிதாவை களம் இறக்கிய எம்ஜிஆர்!

பொதுவாக அந்த நாள் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் சிவாஜி வீடு திரும்பும் பொழுது அடுத்த நாள் காட்சிக்கான டயலாக் பேப்பரை வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் பின் அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பொழுது அந்த டயலாக் பேப்பரை உதவி இயக்குனர் ஒருவரிடம் கொடுத்து மீண்டும் வாசிக்க சொல்லிவிட்டு அதை கேட்டு உள்வாங்கி படப்பிடிப்பிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதை பார்த்த இருவருக்கும் மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டிருந்தது. டயலாக் பேப்பரை முதல் நாளே வாங்கி செல்லும் நடிகர் திலகம் சிவாஜி ஏன் மீண்டும் மறுநாள் உதவி இயக்குனரை அதை வாசிக்க வைத்து அதைக் கேட்டு உள்வாங்கி படத்தில் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் என மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் ஒரு நாள் முக்தா சீனிவாசன் நடிகர் திலகம் சிவாஜி இடம் சென்று இன்று எடுக்கப்பட உள்ள காட்சிகளில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் நடிப்பதற்கான நடிகர்கள் இன்னும் வரவில்லை என்பதால் வேறு காட்சி எடுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது என கூறியுள்ளார். அதற்கு நடிகர் திலகம் சிவாஜியும் சரி என கூறியவுடன் முக்தா சீனிவாசன் அன்றைய காட்சி காண வசனங்களை ஒரு முறை மட்டுமே சிவாஜி இடம் படித்து காண்பித்தார். அதன் பின் நடிகர் திலகம் சிவாஜி ஒரு பிழை இல்லாமல் படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ளார்.

இதை பார்த்த முக்தா சீனிவாசனுக்கும் ஜாவா சீதாராமிற்கும் சந்தேகம் மறைந்துள்ளது. மிகச்சிறந்த திறமைசாலியை நாம் சோதித்து விட்டோம் என மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். நடிகர் திலகம் சிவாஜி நாடகங்களில் நடித்த காலத்தில் 90 பக்கங்களுக்கு மேல் உள்ள வசனங்களை மனப்பாடம் செய்து தத்துரூபமாக நடித்து வந்தார் என்பதை மறந்து அவரை சோதித்த இருவருக்கும் இது நல்ல பாடமாக அமைந்துள்ளது.