கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை ஓரம் கட்ட ஜெயலலிதாவை களம் இறக்கிய எம்ஜிஆர்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவர்களும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்து உள்ளனர். நல்ல உயரம், மாநிறம், பார்ப்பதற்கு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் அமைந்த உடல்வாகு, எல்லோரிடமும் இனிமையாக பழகக்கூடிய குணம் நிறை சரோஜாதேவி தான் நடித்த திரைப்படங்களில் மிகச் சிறந்த நடிப்புத் திறனை வெளிக்காட்ட கூடியவர். தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தமிழிலும் பல ஹீரோக்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் மிகப் பிரபலமான நடிகை வைஜெயந்தி மாலாவின் சாயலை கொண்டிருந்தார் சரோஜாதேவி அவர்கள். இதன்பின் சரோஜா தேவியை கருப்பு வைஜெயந்தி மாலா என்று அன்போடு ரசிகர்களால் அழைப்பார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் குழந்தைத்தனமான இவரது நடிப்பு, செல்லம் கொஞ்சம் இவரின் குரல் வளம் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது. பட்டித் தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பும் பல பாடல்களை இவர் கொடுத்துள்ளார். அதற்கு உதாரணமாக தொட்டால் பூ மலரும் பாடலை கூறலாம்.

அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த பிறகு சரோஜாதேவியின் மார்க்கெட் சரிய தொடங்கியது என்றே கூறலாம். ஏற்கனவே அவர் நடித்த படங்களில் எந்தவிதமான கவர்ச்சியையும் காட்டாமல் குடும்ப பங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவரை அடுத்து திரைக்கு வந்த புதிய நடிகைகள் அனைவரும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் அதீத கவர்ச்சியோடு நடித்த காரணத்தாலும் நடிகை சரோஜா தேவியின் நடிப்பு ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டது என்றே கூறலாம்.

விஜயகாந்திற்கு இரங்கல் அறிக்கை விடாமல் வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் தல.. அஜித்தை விளாசித் தள்ளிய விமர்சகர்!

புதுமுக நடிகைகளான ஜெயலலிதா லதா, வெண்ணிற ஆடை நிர்மலா இவர்களின் வரவு சரோஜா தேவியின் திரை வாழ்க்கைக்கு ஒரு பின்னடைவை தந்தது. அந்த வகையில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்ட சரோஜாதேவி அவர்கள் புதுமுக நடிகைகளின் படையெடுப்பு காரணமாகவும் புதுப்படங்களில் தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போன காரணத்தினாலும் அவர் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து நடிப்பதையே கைவிட்டு விட்டார். ஆனால் இதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எம்ஜிஆர் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது இனிமேல் அவரால் பேச முடியாது இனி திரை உலகில் அவரால் எந்த சாதனையும் புரிய முடியாது என பல திரையுலக பிரபலங்கள் பேட்டிகளை தெரிவித்து இருந்தனர்.

அதை சரோஜா தேவியும் உண்மை என்று எடுத்துக்கொண்டு இனிமேல் எம்ஜிஆர் உடன் நடித்தால் நமது மார்க்கெட் கெட்டுவிடும் என்று நினைத்துள்ளார். ஆனால் சரோஜாதேவி தாயார் அதை வெளிப்படையாக கூறியுள்ளார். இனிமேல் என் மகள் எம்ஜிஆர் உடன் இணைந்து நடிக்க மாட்டார் என பத்திரிகை விளம்பரம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதனால் தான் எம்ஜிஆர் அவர்களுக்கு சரோஜாதேவி மீது மிகுந்த கோபம் ஏற்பட்டுள்ளது. சரோஜா தேவியை திரை உலகில் இருந்து ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே நடிகர் எம்ஜிஆர் பல புதுமுக நடிகைகளை களத்தில் இறக்கியுள்ளார். அந்த வகையில் நடிகை ஜெயலலிதா லதா என பல புது நடிகைகளுடன் இணைந்து எம்ஜிஆர் நடித்த ஒவ்வொரு படமும் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.