கார்த்தியை கட்டிப் பிடித்து அழுத சூர்யா… இதான் காரணமா? தம்பியுடையான் படைக்கு அஞ்சான்

By John A

Published:

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்றொரு பழமொழி உண்டு. தமிழ் சினிமாவிலும் இதுபோன்றதொரு அண்ணன் தம்பியாக விளங்கி வருபவர்கள் சூர்யா – கார்த்தி. இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகின்றனர். அதிலும் அண்ணன் சூர்யாவையே நடிப்பில் ஓவர் டேக் செய்து முதல் படம் என்ற சுவடே தெரியாமல் நடித்து பருத்தி வீரன் படம் மூலம் மாபெரும் ஓப்பனிங் கொடுத்தவர் கார்த்தி.

கார்த்தி ஏற்கனவே சூர்யா நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருப்பார். மேலும் இப்படத்தில் சித்தார்த்துடன் கல்லூரி மாணவராக ஒரு காட்சியிலும் தோன்றியிருப்பார். அமெரிக்காவில் எம்.எஸ் படித்த கார்த்தியை புழுதில் காட்டில் புரளவிட்டு, முரட்டு ஆளாகவும், அடிதடி நாயகனாகவும் மாற்றிய பெருமை இயக்குநர் அமீருக்கே உண்டு. பிரியாமணியும் இதில் முத்தழகுவாக வாழ்ந்திருந்தார்.

அமெரிக்காவையே அதிர வைத்த நாக்க முக்க பாடல்… இசைக்கு மொழி அவசியமில்லை என நிரூபித்த விஜய் ஆண்டனி

தனது முதல் படமான மௌம் பேசியதே படத்தில் அண்ணன் சூர்யாவை இயக்கியவர் பிறகு ஜீவாவை வைத்து ராம் படத்தைக் கொடுத்து கவனிக்க வைத்தார். தனது மூன்றாவது படத்தை தானே தயாரித்து மதுரை, தேனி வட்டார வழக்கில் பருத்தி வீரன் என்ற படத்தில் கார்த்தியை நடிக்க வைத்தார். 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 65 கோடியை வசூலித்து வெற்றிப் பட வரிசையில் இணைந்தது. இன்றும் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக பருத்திவீரன் இருப்பது குறிப்பிடத்தக்கது. யுவனின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.

செயற்கை வெளிச்சம் எதுவும் இல்லாமல் முழுவதும் சூரிய ஒளியிலேயே எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையையும் பருத்தி வீரன் பெற்றது. இவ்வளவு பெருமைகள் கொண்ட இந்தப் படத்தைப் சமீபத்தில் சூர்யா பார்த்து கார்த்தியின் அபார நடிப்பைக் கண்டு வியந்து போனாராம். மிகவும் வசதியாக, சொகுசாக வாழ்ந்த பையன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை அவமானங்கள், அசிங்கங்களைச் சந்தித்து மிகவும் கஷ்டப்பட்டு இரண்டு வருடமாக பல்லைக் கடித்துக் கொண்டு, கஷ்டப்பட்டு நடித்துள்ளான். அவனைக் கட்டி அணைது அழுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் செய்ய முடியவில்லை என சூர்யா பேட்டி ஒன்றில் தனது தம்பி கார்த்தி குறித்து பேசியுள்ளார்.

இத்தனை பாராட்டுக்கும் உண்மையாகவே விடை கொடுக்கிறது பருத்திவீரன் என்னும் காவியம்.