அமெரிக்காவையே அதிர வைத்த நாக்க முக்க பாடல்… இசைக்கு மொழி அவசியமில்லை என நிரூபித்த விஜய் ஆண்டனி

ஒரே ஒரு பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆகி, நடிகர், இசையமைப்பாளர், சன் பிக்சர்ஸ் என அனைவருக்கும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்த படம் தான் காதலில் விழுந்தேன். கடந்த 2008 -ல் வெளியான இத்திரைப்படத்தை பிவி பிரசாத் இயக்கியருந்தார். நகுல், சுனைனா ஆகியோர் நடித்திருந்தனர். சைக்கோ காதல் திரைப்படமான காதலில் விழுந்தேன் ஆரம்பத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் போது படம் காதலில் விழ வைக்காமல் தோல்வியால் கீழே விழுந்தது.

ஆனாலும் சிறப்பான திரைக்கதை, மரண குத்து மற்றும் மெல்லிசைப் பாடல்கள் என அனைத்தும் இருந்தும் படம் ஹிட் ஆகவில்லையே என்று படக்குழு சோகத்தில் ஆழ்ந்திருக்க அப்போது தான் சன்பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியது. தியேட்டர்களில் தோல்வி கண்ட காதலில் விழுந்தேன் படத்தினை சன்பிக்சர்ஸ் வாங்கி மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டது. சன் குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் இப்படத்தின் டிரைலர் விடாமல் ஒளிபரப்பப்பட்டது.

அவ்ளோதான் முதலில் தோல்வி கண்ட இந்தப் படம் தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்தது. தியேட்டர்களில் வசூல் அள்ள ஆரம்பித்தது. முக்கியமாக விஜய் ஆண்டனியின் இசை இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக நகுலுக்கு ஓப்பனிங் பாடலான நாக்க முக்க பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது. தோழியா என் காதலியா பாடலும், உன் தலைமுடி உதிர்வதைக்கூட போன்ற பாடல்களும் காதல் விருந்தாக பலரது ரிங்டோனாக ஒலித்தது.

1935 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சம்பளம்.. கணவரை இழந்த பின் யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத கேபி சுந்தராம்பாள்..

இன்றும் நாக்க முக்க பாடல் வைப் ஏற்றும் ஸ்பீட்பாடலாக பலரது பிளே லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை நகுல், விஜய் ஆண்டனியுடன், கிராமியப் பாடகி சின்னப் பொன்னு பாடியிருப்பார். தற்போது இந்தப் பாடல் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவைக் கலக்கி வருகிறது. அமெரிக்காவின் நடன ரியாலிட்டி ஷோ ஒன்றில் இப்பாடலுக்கு நடனக் கலைஞர்கள் ஆட ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்தது.

America’s got talent நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியின் இந்த ‘நாக்கு முக்க’ பாடலுக்கு நடனம் ஆடியது இந்தியாவைச் சேர்ந்த V.Unbeatable நடனக்குழு..! அவர்களின் ஒவ்வொரு நடன அசைவும் பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்தது. சும்மாவே பாடல்களில் Vibe ஏற்றும் விஜய் ஆண்டனியின் இசை தற்போது அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. தமிழன் எங்கு சென்றாலும் சாதிப்பான் என்பதற்கு இப்பாடலும் ஒரு உதாரணம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews