விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கல?.. பெண் வீட்டார் கொடுத்த ட்விஸ்ட்.. திகைத்து போன பிரேமலதா!

By Ajith V

Published:

கேப்டன் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன் மறைந்து போனது இன்னும் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரை கடுமையாக வாட்டி வருகிறது. அதே போல அவரால் சினிமாவில் சாதித்த பல பிரபலங்களும் கூட, விஜயகாந்த்ன் இறப்பால் உருவாகி உள்ள வெற்றிடத்தின் காரணமாக கடுமையாக மனமுடைந்தும் போயுள்ளனர்.

அப்படி இருக்கையில், விஜயகாந்தை பற்றிய பல்வேறு செய்திகளும் நாளுக்கு நாள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது. அவரது பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விடும் பிரபலங்களின் காணொளிகள் ஒரு பக்கம், விஜயகாந்த் பற்றி இதுவரை வெளிவராத அரிய விடியோக்கள் மற்றும் செய்திகளும் இணையத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை குறித்த சில செய்திகளும் கூட இணையத்தில் தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியினருக்கு மொத்தம் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் தான் விஜய பிரபாகரன். இவரது நிச்சயதார்த்தம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்ததாக சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதே போல, விஜயபிரபாகரன் திருமணம் நின்று போனதற்கான பல்வேறு காரணங்களும் இணையத்தில் அதிகம் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.

இதனிடயே, விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என ஏறக்குறைய உறுதியான தகவல்களும் வலம் வந்த வண்ணம் உள்ளது. அந்த சமயத்தில் மதுரையில் பெண் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து பிரேமலதா, விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் கோவைக்கு கிளம்பி உள்ளதாக தெரிகிறது. விஜயகாந்த் மகன் என்பதால் பெண் பார்க்கும் நிகழ்ச்சியையே திருவிழா போல கருதி மண்டபம் எடுத்தும் பெண் வீட்டார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

அதே போல, பெண் பார்க்கும் நிகழ்ச்சியிலும் மீடியா மற்றும் கோவையில் உள்ள பலரும் கூட கலந்து கொள்ள ஏதோ திருமண நிகழ்வு போலவும் மாறி போனதாக கூறப்படுகிறது. விஜயபிரபாகரன் மற்றும் அந்த பெண் ஆகிய இருவரும் ஒன்றாக நிச்சயதார்த்தம் நடந்தது போல அமர்ந்திருக்கும் புகைப்படங்களும், அதற்கு அட்சதையும் பிரேமலதா தூவி இருந்த நிலையில், இது தொடர்பான விளக்கத்தின் படி அந்த பெண்ணை தனியாக தான் ஆசீர்வாதம் செய்துள்ளார். ஆனால் தனது மகனுடனும் சேர்த்து தெரிந்ததால் அது நிச்சயதார்த்தம் என பலரும் குறிப்பிட்டு வந்தனர்.

ஒரு வேளை நிச்சயதார்த்தமாக இருந்தால் விஜயகாந்த் மற்றும் கட்சி தொண்டர்களும் கூட இருந்திருப்பார்கள் என தெரிகிறது. இதனால் பெண் பார்க்கப் போன இடத்தில் தான் இப்படி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெண் பார்க்க போனதையே திருமணத்தை போல மாற்றியதால் எரிச்சலடைந்த பிரேமலதா, இந்த சம்மந்தத்தை வேண்டாம் என நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மூத்த மகனுக்கு வரன் பார்த்து வந்துள்ளார் பிரேமலதா. ஆனால், விஜயகாந்த் உடல்நிலை காரணமாக அதனை தள்ளி வைத்த சூழலில், கேப்டனும் மறைந்துள்ளதால் அவர்களின் திருமணத்திற்கு இன்னும் கால தாமதமாகும் என்றும் தெரிகிறது. இரண்டு மகன்களின் திருமணத்தையும் விஜயகாந்தால் பார்க்க முடியாத நிலையில், புதிதாக அவர் கட்டி வந்த வீடும் வேலை முடியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.