டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த எம்ஜிஆரின் இரண்டு திரைப்படங்கள்!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும் பொழுது பெரிய ஆரவாரங்களுடன் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக ஒன்றாக மாறியுள்ளது. அந்த திரைப்படங்கள் குறித்த மிக உயர்ந்த பேனர்கள் மற்றும் ரசிகர்களின் கட்டவுட்டுகள் என பார்க்கும் இடமெல்லாம் முன்னணி ஹீரோக்களின் புகைப்படமாக தான் இருக்கும். மேலும் அந்தப் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்வது, மாலைகள் போடுவது, கோஷங்கள் எழுப்புவது என திரையரங்கமே திருவிழா கோலம் கொண்டிருக்கும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக ரசிகர்களின் காட்சியாக திரையரங்கு கலை கட்டி இருக்கும். அதன் பின்னரே குடும்ப ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும். இந்த காலத்தை போல அந்த காலத்திலும் சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு மக்கள் அதிகப்படியான ஆரவாரங்களை செய்து வந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இன்றைய சினிமாவில் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோன்று அந்த காலத்திலும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே டிக்கெட்களை வாங்கி வைத்துள்ளனர். எந்த முன்னனி ஹீரோவின் படத்திற்கு இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1950 களில் இருந்து தான் திரையரங்குகளில் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும் பொழுது அந்த ஹீரோவின் படத்தின் டைட்டில்களை தோரணமாக கட்டுவதும் பெரிய கட்டவுட்டுகள் வைப்பதும் கொடிகள் நடுவது என பல ஆரவாரங்களை செய்ய தொடங்கியுள்ளனர். அந்த ஹீரோ வேறு யாரும் அல்ல மக்கள் திலகம் எம்ஜி ஆர் அவர்கள் தான். அன்றே காலத்தில் எம்ஜிஆரின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது மேளதாளத்துடன் மிகச் சிறந்த வரவேற்பை கொடுத்து ரசிகர்கள் கொண்டாடி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே திரையரங்குகளில் முந்தைய நாள் இரவு வந்து தங்கிக் கொண்டு அடுத்த நாள் காலையில் டிக்கெட்டுகளை முன்பதிவிற்காக ரசிகர்கள் வாங்கிக் கொண்டு சென்ற காலமும் இருந்துள்ளது. எம் ஜி ஆரின் எந்தெந்த படங்களுக்கு இதுபோன்ற அதிசய நிகழ்வு நடந்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

1975 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இதயக்கனி. ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜ சுலோசனா,உசிலைமணி என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தின் மூலமாகத்தான் நடிகை ராதா சலுஜா ஹிந்தியில் இருந்து தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது. இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

சத்யா மூவி தயாரிப்பில் இதயக்கனி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதயக்கனி திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது சென்னையில் மட்டும் மூன்று நாட்கள் டிக்கெட் முன்பதிவில் 90 ஆயிரம் ரூபாயை தாண்டி வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது. இந்த 90 ஆயிரம் ரூபாய் இப்போதைய மதிப்பில் கணக்கிடும் பொழுது லட்சங்களை தாண்டி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 நடிகைகள் ஒரு பார்வை!

இந்த வசூல் சாதனை அந்த காலத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியாகி மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து பொன்மலை செம்மல் எம்ஜிஆர் இரண்டு வருடங்களில் நடித்து வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்ஜிஆரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் அளவில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிகை மஞ்சுளா கதாநாயகியாக நடித்திருப்பார்.

1973 ஆம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 4.2 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படமும் சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் டிக்கெட் முன்பதிவில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கம் நிரம்பியது உறுதியாகிவிட்டது. அந்த காலத்திலேயே இது போன்ற நிகழ்வுகள் எம்ஜிஆரின் திரைப்படங்களில் நடந்து வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.