2023 ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 நடிகைகள் ஒரு பார்வை!

தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நடிகைகள் இதுவரை இல்லாமல் அதிகப்படியான சம்பளம் வாங்கி நடித்துள்ளனர்.இது குறித்து விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் நாம் பார்க்கும் கதாநாயகி மீனாட்சி சவுத்ரி. டென்டிஸ்ட், மாடலிங், ஆக்டிங் என மூன்று துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தற்போது மீனாட்சி சவுத்ரி தளபதி விஜயுடன் இணைந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த படத்திற்காக இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 50 லட்சம்.

அடுத்த நாம் பார்க்கும் கதாநாயகி பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளர் ஆக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து தற்பொழுது வெள்ளி திரையில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்த பத்து தல படத்திற்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

இதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய நடிகை தமன்னா. ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடலுக்கு நடிகை தமன்னா ரஜினியுடன் இணைந்து மிகக் கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பார். ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தை படைத்த காவாலா பாடல் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் இந்த பாடலுக்கு நடனமாடிய தமன்னாவிற்கு ஒரு கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக நாம் பார்க்கும் கதாநாயகி பிரியங்கா மோகன். இதுவரை மூன்று திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் ஒரு படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக அதிகப்படியான சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கோடியே 25 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். இந்த வருடம் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் மற்றும் சில வெப் சீரியஸ்கள் வெளியாக இருந்த நிலையில் இதற்காக நடிகை சமந்தா 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வரிசையில் நான்காவதாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என நான்கு மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக ராஷ்மிகா தற்பொழுது வலம் வருகிறார். படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா திரைப்படத்திற்கு நான்கு கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் சாய் பல்லவி. தனது நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்தின் மூலமாகவும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார் சாய்பல்லவி. நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

லியோ, ஜெயிலர், துணிவு திரைப்படங்களை தூக்கி சாப்பிட்ட தனுஷின் 3 திரைப்படம்!

இதை அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் லியோ போன்ற திரைப்படங்களின் மூலம் கம்பேக் கொடுத்த திரிஷா தற்பொழுது அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்திலும் கமலஹாசன் உடன் இணைந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது நடிகை திரிஷா அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவான நயன்தாரா சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. தற்போது நயன்தாரா அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களுக்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.