தைரியம் சொன்ன கமலை முட்டாளாக்கிய நாகேஷ்… கடைசி காலத்திலும் காமெடிதான்..!

By Sankar Velu

Published:

தமிழ்சினிமா உலகின் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ். இவர் நடிப்பைப் பார்த்தால் உலகநாயகன் கமலே பொறாமை கொள்வாராம். அவ்வளவு அருமையான நடிப்பை எளிதாக வெளிப்படுத்துவார் நாகேஷ்.

இவரது பன்முகத்திறமையை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் படங்களைப் பார்த்தால் தெரிந்து விடும். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, புன்னகை, நவக்கிரகம் என்ற படங்களைப் பார்த்தால் நாகேஷ் என்ற அந்த மகா கலைஞனின் நடிப்பைப் பார்த்து பிரமித்து விடுவீர்கள்.

வெறும் காமெடி மட்டும் இல்லாமல் சிறந்த குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்துவதில் வல்லவர் நாகேஷ். பாலசந்தர் ரஜினி, கமல் நன்றாக நடிக்கவில்லை என்றால் நாகேஷைப் பாருங்க… இந்த சீன்ல மட்டும் அவன் நடிச்சிருந்தா எப்படி நடிச்சிருப்பான் தெரியுமான்னு திட்டுவாராம். அதே நேரம் நாகேஷைப் பற்றி குறிப்பிடும்போது, என்னுள் இயங்காத நடிகன் நாகேஷ். அவனுள் இயங்காத எழுத்தாளன் நான் என்று சொல்கிறார்.

இதையும் படிங்க… வேட்டையன் படத்திலிருந்து வெளியான மாஸ் சீன்! கடுமையான அப்செட்டில் ரஜினிகாந்த்!

நாகேஷை கமலும் தனது படங்களில் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். நம்மவர், பஞ்சதந்திரம், மகளிர் மட்டும், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வசகோதரர்கள், அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களைப் பார்த்தால் தெரியும்.

நாகேஷ் மகளிர் மட்டும் படத்தில் பிணமாக நடிக்கும்போது கூட எனக்கு டயலாக் வேண்டும் என்று குறும்புத்தனமாக அடம்பிடித்தாராம்.

MMK
MMK

ஒரு நடிகன் எந்தக் கதாபத்திரத்தைக் கொடுத்தாலும் அதைக் கனகச்சிதமாக செய்ய வேண்டும். அவன் தான் உண்மையான நடிகன் என்று அடிக்கடி நிரூபித்தார் நாகேஷ். அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலைப் பார்த்ததும், என்னடா பாதி தான் வந்துருக்கு. மீதியை எங்கேன்னு டைமிங் காமெடியை அடித்தாராம். உடனே கமலுக்கு அந்த இடத்தில் என்ன வசனத்தைப் போடுவது… இப்படி ஒரே போடா போட்டுவிட்டாரே, என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டாராம்.

அதே போல, நம்மவர் படத்தில் மகள் இறந்தது தெரிந்ததும், நாகேஷ் அதான் எல்லாம் முடிஞ்சிப் போச்சே… ஓஹ் எனக்கா…? என்று அந்த இறுக்கமான காட்சியைக்கூட வெகு எளிதாகவும், யதார்த்தமாகவும் நடித்து இருப்பார் நாகேஷ். இப்படி பாலசந்தர் காட்டிய நாகேஷின் பல பரிமாணங்களை கமலும் நாகேஷைத் தனது படங்களில் நடிக்கச் செய்து அந்தக் கலைஞனுக்கு மரியாதை செய்து விட்டார்.

தான் மரணப்படுக்கையில் கிடக்கும்போது நாகேஷைப் பார்த்து கமல் தைரியம் சொன்னாராம். உங்களுக்கு சரியாகிவிடும். சார். நீங்க 100 வருஷம் நல்லாருப்பீங்கன்னு. அதற்கு நாகேஷ், டேய் கமல், பொய் சொல்லாதடா, ரொம்ப நாள் இருக்க மாட்டேன். முட்டாள்களோடு வேலை பார்த்தவனுக்கெல்லாம் ஆயுசு குறைவுடா… உன் கூடயும் வேலை பார்த்திருக்கேன்ல என்று சொல்ல சோகமயமான அந்த இடத்தையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார் அந்த மகா கலைஞன்.