வேட்டையன் படத்திலிருந்து வெளியான மாஸ் சீன்! கடுமையான அப்செட்டில் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கிடைத்த மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தனது 170வது திரைப்படத்தில் ரஜினி பிசியாக நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீச்சர் வீடியோ ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அந்த வகையில் தலைவர் 170 திரைப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தூத்துக்குடி,திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டுள்ளார். அதை தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கமிஷனர் ஆபீஸ் போன்ற செட் அமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், அதில் அதிரடியான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. தமிழ் படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பாகுபலி வில்லன் ராணா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேலு இந்த படத்தை இயக்கி வருவதால் வேட்டையன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் போலி என்கவுண்டர்களை மையமாக வைத்து உருவாக இருப்பதாகவும் நடிகர் ரஜினி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ரஜினியின் மகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் வசந்த் ரவி கதாபாத்திரத்தை போல வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் அமையும் என சில தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் படத்தில் பகத் பாசில் மனைவியாக துஷாரா விஜயன் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ராணா ரகுபதி கொடூர வில்லன்களுக்கு மத்தியில் மிக ஸ்டைலான வில்லனாக நடிக்க இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னை திரும்பி கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லியோ, ஜெயிலர், துணிவு திரைப்படங்களை தூக்கி சாப்பிட்ட தனுஷின் 3 திரைப்படம்!

இந்த நேரத்தில் வேட்டையின் திரைப்படத்திலிருந்து ஒரு சீன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலை ஏற்படுத்தி வருகிறது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பகத் பாசில் இடம் பெற்றுள்ளனர். பள்ளி போன்ற அமைப்பில் வகுப்பறையில் கரும்பலகையில் முன் ரஜினி மற்றும் பகத் பாசில் இருப்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. தூத்துக்குடியில் உள்ள கேரள பாங்கில் அமைந்த பிரம்மாண்ட பள்ளி ஒன்றில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் அங்கு எடுக்கப்பட்ட சில காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் வேட்டையன் படக்குழு அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.