தேசிய விருதை வேண்டாம் என மறுத்த கவிஞர் வாலி! நடந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு காரணமா?

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் கண்ணதாசனிற்கு இணையாக பாடல் எழுதி அதன்பின் அவருக்கு போட்டியாக மாறிய கவிஞர்களுள் ஒருவர்தான் கவிஞர் வாலி. வாலி எழுதிய தேச ஒற்றுமை பாடலுக்கு மத்திய அரசு கொடுத்த தேசிய விருதை அவர் நிராகரித்துள்ளார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து முழு விளக்கத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1973 ஆம் ஆண்டு ஏசி திருலோக சந்தரின் கதை, இயக்கம், தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் பாரத விலாஸ். தமிழ் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி ஹீரோவாகவும் கே ஆர் விஜயா ஹீரோயின் ஆகவும் நடித்திருப்பார். மேலும் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், பி கே ராமசாமி தேவிகா நடிகை ஜெயசித்ரா நடிகை ஜெய சுதா, மனோரம்மா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். எம் என் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுக்கும் கண்ணதாசன் அவர்கள் தான் பாடல் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் மைய கதையாக தேச ஒற்றுமை வலியுறுத்தும் வகையில் பாரத விலாஸ் என்ற வீட்டில் ஹிந்து,முஸ்லிம், கிறிஸ்டியன், பஞ்சாபி என பல மதங்களை பின்பற்றும் குடும்பங்கள் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழும் போது அவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தான் இந்த படத்தின் திரைக்கதை இணைந்திருக்கும். அன்றைய காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்த இந்த படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இந்திய நாடு என் வீடு என்னும் பாடல் இன்றளவும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய பாடல் இருந்து வருகிறது.

இன்றைய காலகட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச ஒற்றுமை பாடலாக இந்த பாடல் தான் ஒழிக்கப்பட்டு வருகிறது. டிஎம்எஸ், எம் எஸ் விஸ்வநாதன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, மலேசியா வாசுதேவன்,கே வீரமணி என ஆறு பாடகர்கள் இணைந்து பாடிய இந்த பாடலில் பலவிதமான இசைக்கருவிகளையும் பயன்படுத்தி இசையமைக்கப்பட்டு இருந்தது. பாரத விலாஸ் படமும் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் இந்த பாடல் அப்போது இருந்த மத்திய அரசின் கவனத்தையும் ஈர்த்து குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இந்திய தேச ஒற்றுமை தேசிய பாடலுக்கு தேசிய விருது கொடுக்க முடிவு செய்த அரசு இது குறித்து கவிஞர் வாலிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தது. அந்த கடிதத்தில் இந்த பாடலுக்கான உங்களுக்கு தேசிய விருது கொடுக்கப் போவதாகவும் அத்துடன் உங்கள் விவரங்கள் அனுப்பும் படியும் அந்த கடிதத்தில் தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த கண்ணதாசன் உடனே அந்த கடிதத்தை கிழித்துப் போட்டுள்ளார். மேலும் எனக்கு விருது கொடுக்க வேண்டும் என்றால் என்னை பற்றி தெரிந்து கொண்டு கொடுக்கட்டும், நானே என்னைப் பற்றி எழுதி விருது வாங்கினால் அதில் மரியாதை இருக்காது.

கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு இதுதான் காரணம் என அதிர்ச்சி அப்டேட் கொடுத்த மருத்துவர்!

இதை கேட்ட அவருடன் இருந்த நண்பர்கள் நல்லா யோசிச்சு பாருங்க என்று சொல்ல எனக்கு மக்கள் கொடுக்கும் இந்த விருதை போதும், தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் என்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டு கொடுக்கட்டும். நானே என்னை பத்தி எழுதி விருது வாங்கினால் அதை நான் காசு கொடுத்து வாங்குவதற்கு சமம் அப்படின்னு சொல்லி அது விருதுக்கும் மரியாதையாக இருக்காது எனக்கும் மரியாதையாக இருக்காது என்று கவிஞர் வாலி கூறியிருக்கிறார்.