கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு இதுதான் காரணம் என அதிர்ச்சி அப்டேட் கொடுத்த மருத்துவர்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வாழ்ந்து மறைந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். கோடிக்கணக்கான ரசிகர்களால் கேப்டன், புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என பாசமாக அழைக்கப்படும் விஜயகாந்த் மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த நிஜ கதாநாயகனாக வலம் வந்தார். படத்தில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையிலும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை குறிக்கோளாக வைத்து வாழ்ந்து பிறருக்கு பல உதவிகளை எதிர்பாராத நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் செய்து வந்துள்ளார். மேலும் அனைத்து மக்களுக்கும் நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்பது அவரின் உயர்ந்த எண்ணமாக இருந்துள்ளது. உணவில்லாமல் யாரும் வருத்தப்படக்கூடாது என்பதற்காகவே தன்னால் இயன்ற அளவு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானங்களை செய்து வந்துள்ளார் விஜயகாந்த்.

இத்தகைய உயர்ந்த குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். உண்மையான ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்கள் ஒன்றை சாட்சியாக அமைந்துள்ளது. அந்த அளவிற்கு விடாமல் முயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் என சண்டைக் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருப்பார் கேப்டன் விஜயகாந்த். படங்களில் நடிப்பதை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்னும் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க தொடங்கினார். இதன் மூலமாக மக்களுக்கு என்ற வரை பணியாற்ற வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்தார். மேலும் தமிழ்நாட்டின் ஐந்து ஆண்டு எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

அதன்பின் அரசியலில் ஏற்பட்ட சில சறுக்கல்கள் காரணமாகவும் உடல்நிலை குறைவு காரணமாகவும் பொது வெளிகளில் கேப்டன் விஜயகாந்த் பார்ப்பது சற்று கடினம் ஆகிவிட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த சில மாதங்களின் முன் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது அப்பொழுது விஜயகாந்தை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் கோளாறுகளின் காரணமாக தொடர்ந்து சிகிச்சையில் இருந்த கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் தன் ட்ரீட்மெண்டை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்திருந்தார். இந்த மாதம் 11-ம் தேதி கேப்டன் விஜயகாந்த் பூரண குணமடைந்ததாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

அதன் பின் நேற்று முன்தினம் ரெகுலர் செக்கப்பிற்காக மருத்துவமனை வந்துள்ளதாக தேமுதிக கட்சியின் சார்பாக அறிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை கேப்டன் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கைகள் வெளியாக இருந்தது. அதன் பிறகு இன்று காலை விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து நடிகர் விஜயகாந்த் இருக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர் ப்ரித்வி மோகன்தாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான விளக்க உரை ஒன்றை கொடுத்துள்ளார்.

இயக்குனர் அட்லியை லாக் செய்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்! சம்பவத்திற்கு தயாரான ரசிகர்கள்!

நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்த விஜயகாந்திற்கு வென்டிலேட்டர் மூலமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ பணியாளர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கடின முயற்சிகள் இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சைகள் பலனின்றி இறந்தார் என தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்தின் இந்த இழப்பு தமிழ் சினிமாவை நிலை குலைய வைத்துள்ளது. நடிகர் விஜயகாந்த் மறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படப்பிடிப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...