முதல் படத்திலேயே நடிகர்களை செருப்பால் விளாசிய நடிகை… சொர்ணக்காவுக்கே சவால் விட்ட வில்லி!

By John A

Published:

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்தவர்களுக்கு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவைத் தாண்டி அடுத்ததாக நடிப்பில் அனைவரையும் புருவம் உயர வைத்தவர் யாரென்றால் படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கும் சிந்தாமணி கபிலா வேணு தான்.

தனியாக அழைத்து இளவரசுவையும், வில்லன் ஷைன் டாம் சாக்கோவையும் செருப்பால் அடித்த காட்சியில் சொர்ணக்காவையே மிஞ்சியிருப்பார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இவரைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் இயல்பாகவே இவர் டிராமா ஆர்டிஸ்ட் என்பதால்தான். கேரளத்தின் திருச்சூரைப் பூர்வீகமாகக் கொண்ட கபிலா வேணு கேரளத்தின் பாரம்பரிய கலையான குடியாட்டம் கலையின் பயிற்சியாளர் மற்றும் டான்ஸராகவும் உள்ளார்.

ஜிகர்தண்டா படத்தில் நடித்த அனுபவம் பற்றிக் கூறும்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்னுடைய கதாபாத்திரம் குறித்துக் கூறும்போது முதலில் தயங்கினேன். பின்னர் செருப்பால் அடிக்கும் காட்சியில் இளவரசு தைரியம் கொடுத்தார். பராவயில்லை சும்மா அடிங்க.. எல்லாம் நடிப்புத்தானே என தைரியம் கொடுக்க கன்னா பின்னான்னு அடிச்சு நடிச்சேன். அதன்பிறகு மிக பதட்டமாகவும், தயக்கமாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் அடுத்த காட்சிக்கு தயாராகி விட்டார்கள்.

என்னது இந்தப் பாட்டுக்கெல்லாம் இசையே கிடையாதா..? பின்னணி இசையே இல்லாமல் ஹிட் ஆன பாடல்கள்

மேலும் அந்த கதாபாத்திரத்தைக் காணும்போது ஜெயலலிதா போன்று உள்ளதாக விமர்சனங்கள் வந்தது. ஆனால் நான் மம்தா பானர்ஜியை மனதில் வைத்து அப்படத்தில் நடித்தேன். இந்தக் கேரக்டர் இவ்வளவு பிரபலம் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் கபிலா வேணு.

இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பில் சோமிதரன் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்துள்ளார். இன்னும் அந்தப் படம் வெளியாகவில்லை. மேலும் குடியாட்டம் கலை தொடர்பான ஆங்கில ஆவணப் படத்திலும் நடித்திருக்கிறார் கபிலா வேணு. இதில் இவரின் நடிப்பைப் பார்த்த கார்த்திக்  சுப்புராஜ் இவ்வளவு அழுத்தமான ரோலுக்கு இவர்தான் கச்சிதம் என கபிலா  வேணுவைத் தேர்ந்தெடுக்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையரங்குகளில் வெற்றி வாகை சூடியதோடு மட்டுமல்லாமல் தற்போது ஒடிடி தளங்களிலும ரிலீஸ் ஆகி மீண்டும் அடுத்த ரவுண்டில் ஹிட் அடித்துள்ளது. இதனுடன் வெளியான கார்த்தியின் ஜப்பான் படம் வந்த வேகத்தில் மீண்டும் பெட்டிக்குள் சென்று முடங்கி விட்டது.