என்னது இந்தப் பாட்டுக்கெல்லாம் இசையே கிடையாதா..? பின்னணி இசையே இல்லாமல் ஹிட்டான பாடல்கள்!

சினிமாவிற்கு இசை என்பது இதயத் துடிப்பு போன்றது. வெறும் வசனங்களை மட்டும் வைத்து படத்தைப் பார்த்தால் அது உணர்வுப் பூர்வமாக இருக்காது. ஆனால் இசையே இல்லாமல் வெறும் பாடல் வரிகளைக் கொண்டே சில பாடல்கள் ஹிட் ஆனது. அது என்னென்ன பாடல்கள் என பார்ப்போமா..!

வழக்கு எண் 18/9 படத்தில் வரும் பாடல்களைக் கவனித்தால் தெரியும். 2012ல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பிரசன்னா இசையில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் அவ்வாறு இசை அல்லாமல் இரு பாடல்கள் இடம்பெற்றது.

கவிஞர் நா.முத்துக்குமார் வரிகளில் இடம் பெற்ற வானத்தையே எட்டிப் பிடிப்பேன் என்ற பாடல் தான் அது. இப்பாடலைப் பாடியவர் தண்டபானி . அடுத்ததாக அதே படத்தில் கவிஞர் நா.முத்துக்குமார் வரிகளில் வெளியான ‘ஒரு குரல் கேட்கது பெண்ணே‘ என்ற பாடலும் இசை அல்லாமலே இடம்பெற்றது. பாடியவர்: கார்த்திக். இந்த இரு பாடல்கள் பின்னனி இசை இல்லாமல் இடம் பெற்றாலும் அமரகவி நா.முத்துக்குமாரின் வரிகள் பெறும் பக்கபலமாக அமைந்தது.

டாக்டர் ஆக வேண்டியவர் டாப் ஸ்டாராக மாறியது இப்படித்தான் : பிரசாந்த் பற்றி தியாகராஜன் சொன்ன Secret

இதற்கு அடுத்ததாக ஏ.ஆர். ரஹ்மான் இந்த மேஜிக்கை செய்திருப்பார். 1993 ல் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த திருடா திருடா என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் பின்னனி இசை அல்லாமல் வெறும் கோரஸ் ஒலியை வைத்து உருவாக்கி இருப்பார்கள்.

ராசாத்தி என் உசுரு என்ன தில்ல என்ற அந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். ஷாகுல் ஹமித் பாடியிருப்பார். இந்த பாடலும் இசை இல்லாமல் அமைந்தாலும் இன்றளவும் இசை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள பாடல் ஆகும். மேலும் இதே போல் பல பாடல்கள் வெறும் ஹம்மிங் வைத்தே ரிக்கார்டிங் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த அளவிற்கு புகழைப் பெறவில்லை.

இதுபோல் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்கும் பாடல்களில் கதையின் அவசிய தேவை கருதி சில இடங்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால் மௌனப் படங்களுக்கு இசை ஒன்றே பெரும் பக்க பலம். நடிகர்கள் தங்களது நடிப்பைக் கொட்டினாலும் இசை மட்டுமே உணர்வுகளை ரசிகனுக்குக் கடத்தும் கருவியாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews