சினிமாவை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக்கொண்டு மதித்துப் போற்றியவர்தான் சிவாஜி கணேசன். திரையில் அவர் நடித்த கதாபாத்திரங்களை இனி யாரும் நடிக்க முடியாது, நடிக்க முயற்சித்தாலும் அவரது உடல் மொழி முகபாவனை கொண்டு வருவது கஷ்டம்.
திரைத்துறையில் வரலாறு படைத்த மகா கலைஞரான சிவாஜி கணேசன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகு ஒரு காட்சியை மீண்டும் தயாரிப்பாளருக்காக நடித்துக் கொடுத்தார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். 1984 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் வாழ்க்கை.
ஒரு காட்சிக்கு 7 முறை ஒன் மோர்.. கண்ணாடி முன் பல மணி நேரம் நடித்துப் பார்த்த சிவாஜி..!
இந்த படத்தில் அம்பிகா, பாண்டியன், தேங்காய் சீனிவாசன், வி கே ராமசாமி, மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சித்ரா லக்ஷ்மணன் தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு இது இரண்டாவது படம். முதல் படமாக மண்வாசனை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் சித்ரா லட்சுமணன் மற்றொரு படப்பிடிப்பு விழாவில் பங்கேற்க ஏவிஎம் சென்றிருந்தார். அந்த படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன். அங்கு வைத்து சித்ரா லக்ஷ்மணனை பார்த்த சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததல்லவா படத்தை பார்த்தீர்களா எல்லா வேலைகளும் முடிந்து விட்டதா என கேட்டுள்ளார்.
சிவாஜி முதன்முதலாக நடித்த வேடம் எது தெரியுமா? நடிப்புல இவ்ளோ விஷயங்கள் இருக்கா
அப்போது அவர் படம் நன்றாக வந்துள்ளது படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு பாராட்டினர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சி முடிந்து சித்ரா லட்சுமணன் கிளம்பும் நேரத்தில் சிவாஜி கணேசன் அவரைக் கூப்பிட்டு படத்தில் எந்த காட்சியாவது சரி இல்லை என்று தோன்றினால் தயங்காமல் தன்னிடம் கூறினால் மீண்டும் நடித்து தருவதாக கூறியுள்ளார்.
சித்ரா லட்சுமணனும் ஒரு காட்சியில் உங்கள் நடிப்பு கொஞ்சம் குறைவாக இருப்பதாக ஆர்வக்கோளாறில் கூறிவிட்டார். உடனே சிவாஜி படப்பிடிப்புக்கு தேவையான செட்டை தயார் செய்யுமாறு தான் வந்து நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். இதனால் சித்ரா லட்சுமணன் அதிர்ச்சி அடைந்தார்.
ரஜினியின் வேட்டையன் படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் குறித்த மாஸ் அப்டேட்?
இவ்வளவு பெரிய நடிகர் இரண்டாவது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் கூறியதற்காக படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டார் என நினைத்துள்ளார். சிவாஜி கணேசன் சொன்னது போன்றே அடுத்த வாரமே அந்த படப்பிடிப்புக்கான செட் போடப்பட்டு சிவாஜி நடித்துக் கொடுத்துள்ளார். இப்படி நடிப்பை இந்த அளவுக்கு பார்க்க வேண்டும் என்றால் அது சிவாஜி கணேசன் அவர்களால் மட்டுமே முடியும் என்று கூறலாம்.