விருச்சிகம் மார்கழி மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசி அன்பர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக மார்கழி மாதம் இருக்கும். முருகர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மற்றும் ராகவேந்திரர் வழிபாடு செய்துவந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் யாவும் நடக்கப் பெறும். உடல்…

viruchigam

விருச்சிக ராசி அன்பர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக மார்கழி மாதம் இருக்கும். முருகர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மற்றும் ராகவேந்திரர் வழிபாடு செய்துவந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் யாவும் நடக்கப் பெறும்.

உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும், குறிப்பாக முட்டு வலி, முதுகுத் தண்டு வலி, கழுத்துவலி என்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வார்த்தை ப்ரயோகத்தில் மிக மிகக் கவனம் தேவை, பட்டு பட்டென்று பேசுவதைத் தவிர்க்கவும்.

கோபமாக பேச நேரும் இடத்தில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுதல் நல்லது. பேசும்போது தேன் தடவிய வார்த்தை போல் பேசுங்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோக நிமித்தமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் மேல் அதிகாரிகளின் பாராட்டினைப் பெறும்.

வண்டி, வாகனங்கள் ரீதியாக அடிக்கடி பழுது ஏற்பட்டு உங்களுக்கு செலவினை வைப்பதாகவே இருக்கும். பழைய வண்டி, வாகனங்களை மாற்ற நினைத்திருந்தோர் வண்டி, வாகனங்களை மாற்றுவதற்கு ஏற்ற சூழல் அமையப் பெறும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவதற்கான அனுகூலம் நிறைந்த காலகட்டம் இது.

உத்தியோகத்தில் மிகப் பெரும் ஏற்றம் காணப்படும். அரசுத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும், அரசாங்கத்தில் வேலை செய்பவருக்கும் ஏற்ற காலகட்டமாக மார்கழி மாதம் இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும், பாராட்டு மழையில் நனைவீர்கள் என்று கூட சொல்லலாம். மன அழுத்தம் வேண்டாம், இல்லத்தரசிகள் தங்களுக்குப் பிடித்தமான தங்க நகைகள், உடைகள் என அனைத்தையும் வாங்கி மகிழ்வர்.

குடும்பத்தில் ஏற்கனவே இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும்; பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மீண்டும் ஒன்று சேர்வர்.

தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!