ரஜினியின் முதல் சினிமா என்ட்ரி.. அபஸ்வரம் டைட்டில் போட்ட பாலச்சந்தர்.. சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்!

By Aadhi Devan

Published:

Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்ன அறிவுரை!

இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இதில் ஏராளமான படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடும் ஹிட் படங்கள் ஆகும். திரையுலகில் திறமையான நடிப்பாலும் ஸ்டைலாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு வலம் வரும் இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

பயத்தில் உளறிய ரஜினி!.. அதை நக்கலடித்து சிரித்த நாகேஷ்!.. என்ன நடந்தது தெரியுமா..?

இந்நிலையில் பழைய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் முதன்முதலாக நடித்த காட்சி பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பதில் அளித்த போது “அபூர்வ ராகங்கள் படத்தில் நான் நடித்த முதல் காட்சி சுருதி பேதம் என்ற வாக்கியத்துடன் எனது என்ட்ரி சினிமாவுக்கு.

அந்த அபூர்வ ராகங்கள் படத்தில் இசை சம்பந்தமான டைட்டில்களை அவ்வப்போது போட்டு வந்திருப்பார். அதில் நான் வரும்போது சுருதி பேதம் என்று போட்டிருப்பார். அதாவது அபஸ்வரம் என்று அர்த்தம்” எனக் கூறியுள்ளார்.

முதல் டயலாக்கை 100 முறை சொன்ன ரஜினி.. பாலசந்தர் வைத்த அந்தப் பெயர் யாருடையதுன்னு தெரியுமா?

அதன் பிறகு முதல் படம் என்பதால் படம் பார்க்கும்போது இது உங்களை செண்டிமெண்டாக பாதித்ததா என்று கேட்டபோது ரஜினி “அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் மூடநம்பிக்கைவாதி இல்லை” என்று கூறியதோடு “பாலசுந்தர் அவர்களே நீர்க்குமிழி என்ற படத்தின் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமானார். அவர் நீர்க்குமிழியாகவா இருந்தார். இரும்பு குமிழியாக அல்லவா இருந்தார்” எனக் கூறியுள்ளார்.