பயத்தில் உளறிய ரஜினி!.. அதை நக்கலடித்து சிரித்த நாகேஷ்!.. என்ன நடந்தது தெரியுமா..?

ரஜினி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒருவர். 70 வயது தாண்டியும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொண்டு இருக்கிறார். தர்பார்,அண்ணாத்த என தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ரஜினியை தூக்கி விட்டது ஜெய்லர் திரைப்படம். அத்திரைப்படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய ஃபார்மிற்கு வந்துள்ளார் ரஜினி. அதனை அடுத்து ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் எடுத்து வருகிறார் இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படம் பான் இந்திய அளவில் உருவாக்கி வருகிறது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இன்று 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பஞ்ச் வசனங்களை பேசி தெறிக்க விடுகிறார். எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் அதை தன்னுடைய பாணியில் சரளமாக பேசி அசத்தக்கூடியவர். ஆனால் இவரது முதல் படத்தில் ஒரு வசனம் பேசுவதற்கு நூறு முறை பயிற்சி செய்ய இந்த சம்பவத்தை கூறியுள்ளார் சித்ரா லட்சுமணன்.

அது இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வராகங்கள் திரைப்படத்தில் தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. அப்படத்தில் கமல்ஹாசன்,சுந்தர்ராஜன்,ஸ்ரீ வித்யா,ஜெயசுதா இவர்களுடன் நாகேஷ் மற்றும் ரஜினி துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ரஜினி பிறப்பால் ஒரு கன்னடர் என்பதால் அவருக்கு ஆரம்ப காலத்தில் தமிழ் சற்று கடினமாகவே இருந்துள்ளது. சினிமா ஆசையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கையில் கிடைத்த வாய்ப்புதான் அபூர்வராகங்கள் படம்.

முதல் நாள் சூட்டிங் ரஜினிக்கு பரட்டை தலையுடன்,ஒட்டுதாடி,கிழிந்த கோர்ட் என அவருக்கு மேக்கப் போடப்பட்டது. பின்னர் அவருக்கு டயலாக் ”நான் தான் பைரவி புருஷன்” என டயலாக் கொடுக்கப்பட்டது. இதை பேசுவதற்கு சுமார் நூறு முறை பயிற்சி செய்துள்ளார் ரஜினி. அதன் பிறகு சூட்டிங் ஆரம்பமானதும் ரோல் கேமரா ஆக்சன் சொன்னதும் தப்பு தப்பாக அந்த டயலாக்கை சொல்லி இருக்கிறார். காரணம் அங்கு பாலச்சந்தர் இருந்ததால் அவரைப் பார்த்து பயத்தில் தப்பு தப்பாக பேசியுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஓரத்தில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாகேஷ் மற்றும் சுந்தரராஜனும் இதை நக்கல் அடித்து சிரித்துக் கொண்டிருந்தனர். பின்னர் ரஜினி இடம் சென்று பயப்படாதே ரஜினி பாலச்சந்தர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கேட்டு உள்வாங்கி நடித்து விடு என்று சில டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார் நாகேஷ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.