சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் 170 வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தனது 72 வது வயதிலும் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் ரஜினி தனது தொடக்க கால சினிமாவில் அதே அளவு பிசியாக நடித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்து சுவாரசியமான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரஜினிகாந்த் யானையோடு சேர்ந்து நடித்த திரைப்படம் தான் அன்னை ஓர் ஆலயம். இந்த அன்னை ஓர் ஆலயம் படத்தை இயக்குனர் ஆர் தியாகராஜன் இயக்கியிருந்தார். 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று அதே ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் விலங்குகளுக்கும் இடையே அருமையான தாய் பாசம் உள்ளதை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மிகச்சிறப்பாக நடித்திருப்பார். இந்த வெற்றியை தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் வெளியானது அந்த படத்திலும் நடிகர் சூப்பர் ஸ்டார்தான் ஹீரோவாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினி தனது தோள்மேல் சிறுத்தை ஒன்றை தூக்கி வரும் காட்சி அற்புதமாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஜினி இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பல படங்களில் கமிட் ஆகி இருந்தார் அடுத்தடுத்து படப்பிடிப்பு என தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருந்தார். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தயாரிப்பு நிறுவனம் ஆபீசுக்கு வரும் ரஜினி ஒரு ஓரமாக சென்று தன் கையை தலைக்கு மேல் வைத்து படுத்து உறங்கி விடுவாராம் மேலும் ஒரு சின்ன ஹோட்டலில் இடியாப்பம் பாயா வாங்கி வர சொல்லி அதை மட்டுமே சாப்பிட்டு வந்தாராம். மேலும் அந்த நேரத்தில் இடைவெளி இல்லாமல் நடித்து வந்த காரணத்தினால் ரஜினி சில மனக்குழப்பத்தில் இருந்ததை அன்னை ஓர் ஆலயம் படத்தின் தயாரிப்பாளர் ஆன ஆர் தியாகராஜன் புரிந்து கொண்டார்.
உடனே பட கம்பெனி கூட தயாரிப்பு நிர்வாகி, உதவி இயக்குனர் விஜயசிங்கம், கார் டிரைவர் இவர்கள் மூணு பேரையும் எப்பவுமே ரஜினிகாந்த் அவர்கள் கூட சேர்ந்து இருக்கின்ற மாதிரி நாங்கள் ஏற்பாடு பண்ணி இருந்தோம் அது ரஜினிகாந்த் அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என தியாகராஜன் நினைத்துள்ளார். அதன் பின் இது எல்லாத்தையும் தாண்டி ரஜினிகாந்த அவர்களுக்குள்ள மிகப்பெரிய ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதனால் சத்யா ஸ்டூடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வந்த காலத்தில் நடிகர் எம்ஜிஆரின் அவர்களுடைய செயலாளராக இருந்த பத்மநாதன் அவர்களிடம் இந்த சம்பவம் பற்றி எடுத்துக்கூறி தங்கள் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!
அந்த நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். ரஜினி பற்றிய தகவல் எம்ஜிஆர் காதிற்கு சென்றதும் அவர் உடனே ரஜினியின் வீட்டிற்கு நேராக சென்று பார்த்துள்ளார். அப்பொழுது நீங்கள் சிறந்த நடிகராக இருந்தாலும் முதலில் உங்கள் உடலை கவனிக்க வேண்டும். உடல் சிறப்பாக இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து நல்ல படங்களை உங்களால் கொடுக்க முடியும் எனக் கூறி சுவர் இருந்தால் தான் நல்ல சித்திரம் வரைய முடியும் என ரஜினிக்கு சிறந்த ஆலோசனைகளையும் கொடுத்துள்ளார். அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அதைத் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் இயக்குனர் தியாகராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.