1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!

சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனம், மிகப்பெரிய வெற்றி அட்லீ திரை வாழ்க்கைக்கு சிறந்த படிக்கட்டாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி விஜய்யுடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் மூன்று திரைப்படங்களும் கமர்சியல் ஹிட் கொடுத்தது. மேலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்து நடித்திருப்பார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜவான் திரைப்படம் 1150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இயக்குனர் அட்லியை பிரமாண்ட இயக்குனர் வரிசையில் முதன்மை படுத்தியது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அட்லி எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இயக்குனர் அட்லி அடுத்ததாக தனது அண்ணன் நடிகர் விஜய் வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் விஜய்யுடன் ஷாருக்கான் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகின்றனர்.

இதற்கு இடையில் தல அஜித் வைத்து படம் இயக்கவும் இயக்குனர் அட்லி ஆர்வமாக இருப்பதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் அட்லி தற்பொழுது உலக நாயகன் கமலஹாசனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக சமீபத்திய தகவல் உறுதியாக கிடைத்துள்ளது. நடிகர் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 மற்றும் 3 திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் கல்கி திரைப்படத்திலும் பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இணைந்து தக்லைப் திரைப்படத்திலும் நடிகர் கமல் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் கமல் தனது 233 வது படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தில் அவர் ராணுவ வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

சங்கடத்தில் நெளிந்த ரஜினி.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சிவாஜி!

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு பிரம்மாண்ட நடிகர்கள் இணையும் இந்த படத்தின் பட்ஜெட் 1200 கோடி ஆக இருக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் இந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லி இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு பான் இந்தியா சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் 3000 அல்லது 4000 கோடிகளை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இயக்குனர் அட்லி இந்த படத்தின் கதை உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக மும்பையில் கதை டிஸ்கஷனில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.