மேஷ ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை சனி பகவானின் வக்ரத்தால் வேலைப் பளு இருப்பதாய் உணர்வீர்கள். பொருளாதாரம் என்று எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் இல்லை.
வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள்; நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண வாழ்க்கையினைப் பொறுத்தவரை வரன் பார்க்கும் விஷயம்ரீதியாகக் களம் இறங்குவீர்கள்; தட்டிப் போன வரன் உங்களுக்குக் கைகூடும்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். மேலும் இல்லத்தரசிகளுக்குக் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் பல ஏமாற்றங்களையே சந்தித்தநிலையில், தற்போது நீங்கள் நினைக்கும் விஷயங்கள் பலவும் கிடைக்கப் பெறும்.
மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாகச் சிறந்து விளங்குவர். எதிர்காலம் குறித்த உங்களின் திட்டம் நீங்கள் திட்டமிட்டபடி சிறப்பாகவே இருக்கும்.
தாயின் உடல் நலனில் அக்கறை தேவை; சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். வண்டி, வாகனங்கள் வாங்க நினைப்போர் கடன் வாங்கி எதையும் செய்யாமல் இருத்தல் நல்லது.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
புதிதாக எந்தவொரு செயலைச் செய்ய நினைத்தாலும், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் நல்லது.