சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை மாற்றங்களை எதிர்பார்த்து பல கனவுகளுடன் இருக்க வேண்டாம். புதிய திருப்பங்களை எதிர்பார்த்து திட்டங்கள் எதனையும் செய்யாமல் இருத்தல் நல்லது. ஆகஸ்ட் முதல் பாதியினைவிட இரண்டாம் பாதி…

simmam

சிம்ம ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை மாற்றங்களை எதிர்பார்த்து பல கனவுகளுடன் இருக்க வேண்டாம். புதிய திருப்பங்களை எதிர்பார்த்து திட்டங்கள் எதனையும் செய்யாமல் இருத்தல் நல்லது.

ஆகஸ்ட் முதல் பாதியினைவிட இரண்டாம் பாதி சிறப்பாகவே இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் நிறைந்த கலவையான மாதமாகவே இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தொழில்ரீதியாக முதலீடுகள் செய்வது, கூட்டுத் தொழில் துவங்குதல் போன்ற விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்களால் வரன் தட்டிப் போகும், வரனைத் தேர்வு செய்வதில் குழப்பங்கள் இருக்கும்.

ஆனால் தற்போதைய கண்டக சனியைவிட அடுத்துவரவுள்ள அஷ்டமச் சனியில் தடங்கல்கள் மிக அதிகமாகவே இருக்கும் என்பதை நினைவில் கொண்டு சிந்துத்துச் செயல்படுங்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை குழப்பங்கள், அழுத்தங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்; முன் அனுபவம் நிறைந்தவர்களிடம் உங்களின் திட்டங்கள் குறித்து ஆலோசியுங்கள்; பலவகையிலும் ஆராய்ந்து உங்களின் முடிவுகளை நீங்களே எடுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தத்துடன் காணப்படுவீர்கள். கணவன் குடும்பத்தாருடன் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும், உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை அலட்சியத்தால் மட்டுமே உடல் தொந்தரவுகள் ஏற்படும்.