Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் ஏராளமான படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடும் ஹிட் படங்கள் ஆகும்.
திரையுலகில் திறமையான நடிப்பாலும் ஸ்டைலாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு வலம் வரும் இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த அவர்கள் ஒரு பேட்டியின் போது தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றியும் அப்போது தனது மனதின் என்ன ஓட்டங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியபோது நடத்துனராக வேலை செய்துகொண்டிருந்த போது 350 ரூபாய் தான் சம்பளம் கிடைத்ததாகவும் திடீரென நடிக்க துவங்கியதும் 3 லட்சம் 4 லட்சம் என லட்சங்களில் சம்பளம் வந்தது ஆச்சிரியமாக இருந்ததாக திடீர் பெயர் புகழ் எல்லாம் ப்ரம்மிப்பாக இருததாக அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதோடு இதனால் தன்னை மட்டும் கடவுள் தனி பிறவியாக படைத்து விட்டாரோ?
மரியாதையுடனும், அக்கறையுடனும் நடந்து கொள்ளும் ஒரு சிறந்த மனிதர்… ரஜினி பற்றி நடிகை விஜயா..!
இல்லையென்றால் எப்படி இத்தனை பேர் நம்மை பார்க்கிறார்கள்? நம்மை ரசிக்கிறார்கள் என்று ரஜினி அவர்கள் நினைத்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவருக்கு புரிந்துள்ளது எல்லாம் நேரம்தான் சாதாரண மனிதன் தான் கலை உலகம் என ஒன்று உள்ளது அதில் தனது திறமைக்கு வாய்ப்பு கிடைத்து ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை புரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.