மரியாதையுடனும், அக்கறையுடனும் நடந்து கொள்ளும் ஒரு சிறந்த மனிதர்… ரஜினி பற்றி நடிகை விஜயா!

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் ரஜினி தனது 72 வது வயதிலும் ஹீரோவாக படங்களில் நடித்து கலக்கி வருகிறார். மேலும் ரஜினியின் திரைப்படங்களுக்கு இன்றளவும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழ் மொழியை தாண்டி மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார் ரஜினி. அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 650 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து ரஜினி 170 ஆவது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி தனது 171 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த கால சினிமாவிற்கு ஏற்றார் போல் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து ரஜினி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

திரைப்படங்களைப் போல நடிகர் ரஜினியின் இயல்பு வாழ்க்கையும் பல சுவாரசியமான தகவல்களை உள்ளடக்கியது. பிரபல ஹீரோவாக இருக்கும் ரஜினி பொதுவாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் எந்த ஆடம்பரத்தையும் விரும்பாத ரஜினி பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர், சிறந்த மனிதர் என பல சக நடிகர்கள் புகழ்ந்து பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ரஜினியுடன் சில படங்கள் நடித்த விஜயா ரஜினி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து முழு தகவல்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தெலுங்கு தயாரிப்பாளர்!

1978 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ஹீரோவாக நடித்து வெளியான முதல் திரைப்படம் பைரவி. இந்தப் படத்தின் போது தான் தயாரிப்பாளர் கலைபுலி தாணு நடிகர் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றி திரைப்படங்களில் அறிமுகம் செய்து வைத்தார். ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்னும் கௌரவ பட்டம் கிடைத்தது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை விஜயா நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து ரஜினியின் ஆறு புஷ்பங்கள் திரைப்படத்திலும் நடிகை விஜயா நடித்திருப்பார். இதை எடுத்து மனிதனின் மறுபக்கம் என்னும் பாதியில் நின்ற ஒரு படத்திலும் நடிகர் ரஜினிக்கு மனைவியாக விஜயா நடித்திருப்பார்.

தில்லு முல்லு திரைப்படத்திற்கு பின் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாகவும், இரண்டு வெவ்வேறான கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்ததாகவும், சில பிரச்சனையின் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது என விஜயா தெரிவித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை விஜயா ரஜினியின் ராஜாதி ராஜா திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ராஜாதி ராஜா திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த அனுபவத்தை விஜயா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில் ராஜாதி ராஜா படத்தில் நடிக்கும் பொழுது ஆறு மாத காலம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், படப்பிடிப்பின் போது தனது காட்சிகள் எடுக்கப்பட்டவுடன் தனக்கான அறையில் சென்று உடனே படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதாகவும் கூறினார். அப்போது ரஜினி மிகப்பெரிய நடிகராக இருக்கும் பட்சத்தில் என்னை தனியாக வந்து சந்தித்து படப்பிடிப்பின் போது நீங்கள் எந்த சிரமமும் மேற்கொள்ள வேண்டாம் உங்களது காட்சி முடிந்தவுடன் நீங்கள் உடனே வந்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என கூறி தன்னை நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாகவும் கூறினார்.

அதை போல் ஒருநாள் ரஜினி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வரும் நேரத்தில் அவரது ரசிகர்கள் அவரை மறித்துக் கொள்ள அவர்களுடன் உரையாடி அதன் பின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரஜினி உடனே விஜயா அவர்களிடம் நேராக வந்து சிறிது காலதாமதம் ஆகிவிட்டது தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வளவு பெரிய நடிகர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்பதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு தன் சக நடிகர்கள் மீது மிகவும் மரியாதையுடனும், அக்கறையுடனும் நடந்து கொள்ளும் ஒரு சிறந்த மனிதர் ரஜினி என விஜயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பண்பு நலன்கள் குறித்து மிகப் பெருமையாக பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.