தமிழில் இரவும் பகலும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாய் அறிமுகமானவர் நடிகர் ஜெய்ஷங்கர். இவர் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தியே உருவாக்கியவர். பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் தனது நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டினார்.
மேலும் செல்வ மகள், பொம்மலாட்டம், கண்ணன் வருவான் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். மேலும் இக்கால நடிகர்களுடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல நடிகர்களுடன் இணைந்து தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிகர் சிவாஜியின் தீவிர பக்தன். அவரின் பராசக்தி திரைப்படத்தை பல முறை பார்த்து அதில் அவர் பேசிய வசனங்களை மனப்பாடமாக பேசிக்காட்டுவாராம். மேலும் சிவாஜியுடன் நடிப்பதையே தனது நீண்ட நாள் கனவாக கொண்டிருந்தாராம். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பும் ஒரு முறை அவருக்கு வந்ததாம்.
சிவாஜி நடிப்பில் வெளியான மதுரநாட்டு வீரன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்ததாம். இவரும் படபிடிப்பிற்கு தன்னை அழைப்பார்கள் என மிகவும் ஆசையாக இருந்துள்ளார். ஆனால் இவருக்கு படபிடிப்பில் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லையாம். பின் இவரே போன் செய்து கேட்டுள்ளார்.
கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட முதல் தமிழ் சினிமா.. விதை போட்ட தமிழ் சினிமாவின் தந்தை.. 1936-ல நடந்த மேஜிக்!
படபிடிப்பிற்கு அழைப்பேன் என சொன்னீர்களே? என கேட்டுள்ளார். ஆனால் ஜெய்ஷங்கருக்கு அப்போதுதான் பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஆசையாய் சிவாஜி படத்தில் நடிக்க போகிறோம் என கனவுடன் இருந்த ஜெய் ஷங்கருக்கும் மிகப்பெரியா ஏமாற்றம் கிடைத்துள்ளது. அப்படத்தில் ஜெய்ஷங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வெற்று ஒரு நடிகரை நடிக்க வைத்துவிட்டனராம். ஆனால் இதை விட பேர்ரதிர்ச்சி என்னவென்றால் சிவாஜிதான் அக்கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்தாராம்.
இது ஜெய்ஷங்கருக்கு மிகப்பெரிய மனவலியை ஏற்படுத்தியுள்ளது. பின் இப்படியே நாட்கள் செல்ல இவருக்கு டெல்லியில் வேலை கிடைத்ததாம். அப்போது ஏர்போர்ட்டில் வைத்து சோ ராமசாமி சினிமாவில் இப்படி பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். அதனால் நல்ல வேலைக்கு செல். சினிமா வேண்டாம் என கூறினாராம். ஆனால் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினாலும் சிவாஜி படத்தில் நடிக்காத ஏமாற்றத்தினாலும் ஜெய்ஷங்கர் திரும்பவும் சினிமாவிற்கு வந்தாராம். பின் அவரே சினிமா என்றால் இப்படிதான் இருக்கும் என அனுபவத்தில் புரிந்து கொண்டாராம்.
என்னாதிது… எம்ஜிஆருக்கு மறுபடியும் உயிர் கொடுத்துருக்காங்க.. அடடா! என்னம்மா தகதகன்னு ஜொலிக்கிறாரு!