நடித்தது 14 படங்கள்.. ஹிட்டானது 9 படங்கள்.. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்..!

தமிழ் திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அது எம் கே தியாகராஜ பாகவதர் தான். 1939 ஆம் ஆண்டு வெளியான பவளக்கொடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானவர் தியாகராஜ பாகவதர்.

தியாகராஜர் முறையாக சங்கீதம் கற்று கச்சேரி ஒன்றில் பங்கேற்றார் அந்த கச்சேரியில் கலந்து கொண்ட சங்கீத மேதை புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தியாகராஜரின் பாடலைக் கேட்டு வியந்து அவருக்கு பாகவதர் என்ற பட்டத்தை வழங்கினார்.

சிவாஜிக்கு டெஸ்ட் வைத்த இரு ஜாம்பவான்கள்… ஆனால் நடிகர் திலகம்னா சும்மாவா என்ன

பாடலில் தொடங்கிய பாகவதரின் வாழ்க்கை தான் நடிகராக அவரை மாற்றியது. பவள கொடியில் தொடங்கி 14 படங்கள் இவர் நடித்த நிலையில் அதில் 9 படங்கள் சூப்பர் ஹிட் படங்கள் என்று சொல்லலாம். இந்த படங்களினால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தியாகராஜ பாகவதரை நட்சத்திர நாயகராக கொண்டாடினர்.

தியாகராஜ பாகவதரின் நடிப்பில் 1944 ஆம் ஆண்டு வெளியான படம் ஹரிதாஸ் இந்த படத்தின் சாதனையை இன்று வரை எந்த படமும் முறியடிக்க வில்லை என்று கூறலாம் மூன்று வருடங்கள் தொடர்ந்து இந்த படம் திரையரங்கில் ஓடியது.

இவ்வாறு வெற்றி படங்களை கொடுத்த தியாகராஜ பாகவதர் வாழ்வில் மிகப்பெரிய இடியாக இறங்கியது அவர் மீது விழுந்த கொலை பழி. பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் என்பவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தியாகராஜ பாகவதர் பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்.

38 மொழிகளில் மிகப்பிரமாண்டமாக வெளியாகும் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம்!

ஆனால் அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை கிடைத்த படங்களும் வெற்றி பெறவில்லை. இதனால் ஆரம்ப காலகட்டத்தில் செல்வந்தராக வலம் வந்த தியாகராஜ பாகவதர் கடைசி காலங்களில் மிகவும் துயரப்பட்டுள்ளார்.

இவர் கடைசியாக நடித்த படம் சிவகாமி இந்த படத்தில் நடிக்கும் போதே வசனங்கள் பேச முடியாத அளவு நலிவடைந்து இருந்தார். பின்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை 1959 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் எம் கே தியாகராஜ பாகவதர் உயிர் இழந்தார்.

சிம்பு சொன்ன ஒரே ஐடியா : தடாலென 30 கிலோ குறைந்த நடிகர் பாலா-இதான் அந்த சீக்ரெட்

இவர் நடித்தது வெறும் 14 படங்களே ஆனாலும் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் தியாகராஜ பாகவதருக்கு எப்போதும் உண்டு. திரையுலகில் பாகவதாரை போல் வாழ்ந்தாரும் இல்லை வீழ்ந்தாரும் இல்லை என அவரது ரசிகர்கள் கூறுவது உண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews