மும்பை சேர்ந்த சிம்ரன் ஹிந்தி திரையுலகில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியான படங்களில் நடித்த இவர் தமிழ் திரையுலகில் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி வெளியான படம் ஒன்ஸ் மோர். இந்த படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, விஜய், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தான் இந்த படத்தை இயக்கினார்.
50-வது படத்திற்கு தயாராகும் சிம்ரன் : அறம் இயக்குநருடன் இணையும் இடுப்பழகி
பொதுவாக படப்பிடிப்பு என்றாலே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சிவாஜி கணேசன் அவர்கள் வந்துவிடுவார். இதனால் அவரை காக்க வைத்து விடக்கூடாது என்று அவருக்கு முன்பாக வரவேண்டும் என்று பலரும் சீக்கிரம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு அனைத்து ஆர்டிஸ்ட்களும் வந்தபோதும் சிம்ரன் மட்டும் தாமதமாக வந்துள்ளார். அப்போது சிவாஜி கணேசன் அவர்கள் சிம்ரனிடம் எந்த ஊர்மா உனக்கு என்று கேட்டுள்ளார். அதற்கு சிம்ரனும் சிவாஜி கணேசன் யார் என்று தெரியாமல் கூலாக பதில் சொல்லியுள்ளார்.
இதனால் கோபமடைந்த எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் அனைவரிடமும் Pack up என்று கூறிவிட்டார். அப்போது சிவாஜி கணேசன் சந்திரசேகர் அவர்களை அழைத்து சிம்ரன் வேறு ஊரில் இருந்து வந்திருப்பதால் தன்னை யார் என்று தெரியவில்லை.
உங்களுக்கு என்னை தெரியும். இங்கு இருப்பவர்களுக்கு என்னை தெரியும். அந்த பெண்ணிற்கு தெரியாது அல்லவா என்று கூறி அந்த பெண்ணிடம் தன்னை பற்றி கூறிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். அதன்படி சந்திரசேகரும் சிம்ரனிடம் சொல்லி உள்ளார்.
நான் கிறிஸ்டியன் தான்.. ஆனால் நான் இயேசுவை ஃபாலோ பண்ணல.. இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்
உடனடியாக சிம்ரன் சிவாஜி கணேசன் அவர்களிடம் வந்து காலை தொட்டு வணங்கி தனக்குத் உண்மையாகவே யார் என்று தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பிறகு தான் எப்படிப்பட்ட நடிகருடன் நடிக்கிறோம் என்பதை சிம்ரன் புரிந்து கொண்டு நடந்து கொண்டுள்ளார்.